முட்டாள்கள் யார்?
ருசியா - உக்ரைன் போரின் காரணமாக, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். எப்படியாவது அங்கிருந்து வெளியேறி இந்தியா திரும்பி உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் தத்தளிக்கின்றனர்.
இதுதான் சந்தர்ப்பம் என்று இங்குள்ள பார்ப்பனர்கள் பலர் சர்ச்சைக் குப்பைகளை அள்ளி விடுகின்றனர்.
இந்தியாவில் நடக்கும் நீட் தேர்வில் 50 சதவிகிதம் மார்க் வாங்கியவர்கள்தான் இப்படி வெளிநாடுகளுக்குப் படிக்க ஓடுகிறார்கள் என்று இப்பொழுது 'அதிகாரப்பூர்வமற்ற’ பார்ப்பன சங்கப் பிரதி நிதியாக இருக்கும் சுமந்த்ராமன் வாய் சுளுக்கெடுத்து சமூக வலைதளத்தில் உளறிக் கொட்டியுள்ளார்.
ஆனால் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியோ “இந்தியாவில் நீட் தேர்வில் 90 சதவிகிதம் பேர் தவறி விடுகிறார்கள். அவர்களிடம் பணம் உள்ளதால் வெளிநாடுகளில் படிக்கச் சென்று விடுகிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
உண்மை என்னவென்றால், வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் +2 தேர்ச்சி பெற்று பிசிக்ஸ், பயாலஜி, கெமிஸ்ட்ரி பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும் - மார்க் பிரச்சினை இல்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது (Prospectus).
ஆனால், இங்குள்ள பார்ப்பனர்களோ வாய்க்கு வந்தவாறு உளறிக் கொட்டுகிறார்கள்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நெற்றியடியாகப் பிளந்து கட்டினார்.
“நீட்”டைப் பற்றி தப்பும் தவறுமாக உளறிக் கொட்டிய 'ராமன்கள்' முட்டாள்களா? பொய்யர்களா?” என்று சம்மட்டி அடியாகப் போட்டுத் தள்ளினாரே பார்க்கலாம்.
'ராமன்' என்ன செய்தார்? தன் டுவிட்டர் பதிவை அவசர அவசரமாக இழுத்து மூடிவிட்டார் (பிளாக்).
எங்கு பிணம் விழும் கருமாதிக்குச் செல்லலாம் என்பது பார்ப்பனப் புத்தி!
பார்ப்பனர்கள் அறிவு நாணயத்தைத் தெரிந்து கொள்வீர்?
மயிலாடன்
No comments:
Post a Comment