சிவனடியார்களைத் தடுக்கும் - சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமை ஆக்க வேண்டும் என்று மேனாள் அமைச்சர் வி.வே. சாமிநாதன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் தமிழர்கள் சிவமதத்தினரின் பிரதான புராதன பொதுக் கோயில் திருப்பதி ஏழுமலையானுக்கு முன்பு தோன்றிய பொற்கோயிலில் சந்நிதானத்திற்கு முன் சிற்றம்பல மேடையில் தமிழர்கள் தமிழில் தேவாரம் - திருவாசகம் பாடி வழிபட ஏற முயன்றபோது தெய்வத் தமிழ் பேரவையின் தேனி மாவட்டம், குச்சானூர் ராஜயோக சித்தர் பீடம் குச்சனூர் கிழார் தலைமையில் 17 பெண்கள் உள்பட சிற்றம்பல மேடை ஏறி தேவாரம் பாடச் சென்ற 63 பேர்களை காவல்துறை கைது செய்தது கண்டனத்துக் குரியது. இந்து தமிழ் நாளிதழ் சென்னை பதிப்பு தேதி 1/3/2022இல் படித்து திடுக்கிட்டேன்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயஷீலா என்ற தமிழச்சி பக்தர் தரிசனம் செய்ய சிற்றம்பல மேடை ஏறியபோது தீட்சதர்கள் அவரை தாக்கிய புகாரில் தீட்சதர்களை கைது செய்யாத போலீஸ், தமிழர்களை அதுவும் வெளியூர் தேனி மாவட்டத்திலிருந்து தெய்வத் தமிழ் பேரவையினர் குச்சனூர் வடகுரு மடாதிபதி ராஜயோக சித்தர் வீட்டு குச்சனூர் கிழார் தலைமையில் சிதம்பரம் நடராசர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடச் சென்ற 63 பேர்களை 17 பெண்களை கைது செய்தது கண்டனத் துக்கும் உள்துறை அமைச்சர், முதல்வர் கவனத்துக்கும் உரியது.
சிவனடியார்களைத் தடுப்பதா?
நடராசர் கோயிலில் வடநாட்டு கங்கை கரைவனப் பகுதியிலிருந்து பூசை வேலைக்காக வரவழைக்கப் பட்ட கொஞ்சப் பேர் அர்ச்சகர் என்ற போர்வையில் திருமூலர் கண்ட ஆகம முறைப்படி இருந்த வழி பாட்டை அழித்து தீயை வணங்கும் வேதியர் ஆகமத் தில் சட்டத்திற்கு விரோதமாக தினம் வழிபாடு நடத்து பவர்கள் அரசாங்கத்தின் அடுப்பங்கரை செல்லப் பிள்ளைகளாக இருக்கும் தீட்சதர்கள் ஆகமவிதி மீறல் என்று தடுத்ததே குற்றம். டாக்டர் சத்தியவேல் முருக னார், ஓய்வுபெற்ற அரசு அலுவலர் போன்ற அரசு ஆகம நிபுணர்களை கலந்தால் உண்மை விளங்கும்.
இதற்கு முன்பு நடராசர் கோயில் சிற்றம்பல மேடையில் சிவனடியார் தமிழன் ஆறுமுகசாமி வன்னியர் சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடியதால் தீட்சதர்களுக்கும் கடலூர் ஸ்பெஷல் போலீஸ் கமாண்டோ அதிகாரி களுக்கும் நடந்த கடும் மோதலை தவிர்க்க அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர், சிற்றம்பல மேடையில் தமிழர் யாரும் கட்டணமில்லாமல் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என போட்ட அரசு ஆணை நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களா? அரசியல் சாசனம் விதி 13 இறந்து விட்டதா. சமூக நீதி வேண்டாமா?
சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு முதல்வர் கலைஞர் E.O.நியமித்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது எப்படி தீட்சதர்களுக்கு நடராசர் கோயில் பரிபூரண சொந்தமாகும். பழையபடி கோயிலில் அர்ச்சகர்களாக இருக்கலாம் - Possession cannot confer ownership - நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதி அரசர் சர் ஜி. முத்துசாமி அய்யரும் வெள்ளைக்கார நீதியரசர் ஷெப்பர்டும் தில்லை தீட்சதர்கள் ஒருபொழுதும் சொந்தக்காரர்கள் ஆக முடியாது என்று அளித்த தீர்ப்பு அப்படியே உயிருடன் இருக்கிறதே - அப்பீல் செய்து மாற்றப்படவில்லையே.
எனவே ஒரே வழி சிதம்பரம் நடராசர் கோயிலை காசி விஸ்வநாதர் கோயிலைப்போல் நாட்டுடமை ஆக்குவதுதான்.
இவ்வாறு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவிலிருந்த வி.வே. சுவாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment