சென்னை, மார்ச் 2- தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளின் நலனை பாது காத்து, அவர்களின் வருவாயை உயர்த்தும் வகையில் முதல் முறை யாக கடந்த 2021-2022ஆம் ஆண் டில் வேளாண் மைக்கு என தனி யாக நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இது, விவசாயிகள் மட்டுமல் லாது, வேளாண் சார்ந்த பல்வேறு பிரிவு மக்களின் பாராட்டை பெற் றது. கடந்தாண் டைப் போன்று வரும் 2022--2023ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவை யில் விரைவில் தாக்கல் செய்யப்படு கிறது.
முதலமைச்சர் அறிவுறுத்தல்
நிதிநிலை அறிக்கையை தயாரிக் கும் முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்று மதியாளர்கள் என பல்வேறு வகையான பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துகளை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்குமாறு முத லமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, பிப். 23ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம்அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதி யாளர்கள் உள்ளிட்ட வேளாண் மையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளை கேட்ட றியும் வகை யில், மாநிலத்தில் கருத்து கேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்பட வுள்ளன. காணொலி காட்சி வாயிலாகவும் கருத்து கேட்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைதீர் கூட்ட கருத்துகள்
மாவட்டம்தோறும் ஆட்சியர் கள் தலைமையில் விவசாயிகளின் குறைதீர் நாட்களில் பெறப்பட்ட விவசாயிகளின் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் தங்கள் கருத்து களை, அரசுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் தொலைபேசி எண் அல்லது இதர சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக் கலாம். கடிதத்தை, வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண் துறை, தலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், agrisec@tn.gov.in / agrips@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 93848 76300 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூல மும், ‘@ agridept_tn’ என்ற இணைப் பில் ட்விட்டர் மூலமும், ‘உழவன் ஆப்’-இல் “பட்ஜெட் கருத்துகள்” என்ற சேவையின் கீழும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment