உ.பி. தேர்தலும் சமூகநீதியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

உ.பி. தேர்தலும் சமூகநீதியும்

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பா..., காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமை யான போட்டி நிலவிவருகிறது

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 7-ஆம் தேதி நடைபெறும் இறுதிக் கட்டத் தேர்தலில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ள டக்கிய அசம்கர் பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற விருக்கிறது.

ஜலால்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது  அவர் குறிப்பிட்டதாவது:

 அரசுத்துறைகளில் தான் இட ஒதுக்கீடு உள்ளது, இட ஒதுக்கீட்டிற்கு என்றுமே எதிரான மனநிலை கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டளையை நிறைவேற்றும் அரசியல் அதிகாரப்பிரிவாக பா... உள்ளது.

ஆகவே தான் இட ஒதுக்கீட்டை வழங்கும் பொறுப் பில் உள்ள அரசுத்துறை நிறுவனங்களை பா... அரசு தனியாருக்கு விற்றுக் கொண்டு இருக்கிறது.

 இதன் மூலம் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான`பா... அரசு இட ஒதுக்கீட்டை ஒழிக்கச் சதி செய்து வருகிறது. அதேபோல் உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையில் உள்ள பா... அரசு கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் இட ஒதுக்கீட்டு முறையில் பணியாளர்களை நியமிக்கவில்லை. முக்கிய துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்த அடிப் படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு செலவீனக் குறைப்பு என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். சமூக நீதிக்காக பாடுபட்டு பெற்றுத்தந்த உரிமைகள் இவர்கள் கைகளில் அதிகாரம் சென்ற காரணத்தால் பறிக்கப் பட்டு வருகின்றன.

 இவர்கள் ஆட்சியில் தொடர்ந்தால் நமக்கான அனைத்தையும் பறித்து விடுவார்கள். இட ஒதுக்கீடு இல்லை என்றால் நம் நிலை மோசமாகி விடும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பேத்கர்நகர் மற்றும் அசம்கர் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நடந்து முடிந்த பல கட்ட தேர்தல்களில், மக்கள் பா..-வை நிராகரித்துவிட்டனர். மேலும் அடுத்த கட்டம் வரும்போது, ​​​​பா... அழிந்துவிடும் என்பது உறுதியாகிவிடும். சமாஜ்வாடி கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது. பா... தலைவர்கள்  பலர் தங்கள் வீடுகளிலிருந்து பா... கொடிகளைக் கழற்றத் தொடங்கியுள்ளனர்'' என்றார்அகிலேஷ்.

சமாஜ்வாடிக் கட்சித் தலைவரும், மேனாள் .பி. முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ள இந்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை - நுட்பமானவையும்கூட!

இந்தியத் துணைக் கண்டத்தில் உத்தரப் பிரதேசத் தில்தான் பார்ப்பனர்கள் கணிசமான அளவில் உள்ளனர். பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படாமல் 14 சதவீத பார்ப்பனர்கள் வாக்குகளைப் பற்றித் தான் கவலைப்படுகின்றனர். எல்லாத்துறைகளி லும் பார்ப்பனர் ஆதிக்கம் அங்கே கொடி கட்டிப் பறக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலில் இதற் கொரு முடிவு ஏற்பட்டால் அதன் நிலை இந்தியா முழுவதும் சமூகநீதி அலையாகச் சுழன்றடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment