அரசு பள்ளி ஆசிரியர்கள் வேறு தொழில் செய்தால் நடவடிக்கை தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

அரசு பள்ளி ஆசிரியர்கள் வேறு தொழில் செய்தால் நடவடிக்கை தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 3 அரசு பள்ளி ஆசிரி யர்கள் சொந்த தொழிலில் ஈடுபட்டாலும், தனியாக வேறு தொழில் செய்வதாக புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

    நானும், எனது கணவரும் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். கணவன், மனைவி இருவரும் அரசு பணியாளர்களாக இருக்கும் பட்சத்தில் இருவரில் யாராவது ஒருவர் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக சென்று பணியாற்றினால், அவர் அருகாமையில் உள்ள பணியிடங்களுக்கு இடமாறுதல் கோரினால் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது.

    அந்த வகையில் இடமாறுதலுக்கு நான் தகுதியானவர் என்பதால், விண்ணப் பித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது வசிப்பிடத்தின் அருகில் பணியிட மாறுதல் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, மனுதாரர் வசிப்பிடத்தில் இருந்து குறிப் பிட்ட அந்த பள்ளி 18 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. எனவே மனுதா ரருக்கு இடமாறுதல் அளிக்க இயலாது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    அரசு பள்ளிகளுக்கு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தேசத்தின் முதுகெலும்பான இளைஞர் களை சரியான முறையில் வழிநடத்த ஆசிரியர்கள் தவறுவது, நமது அரசமைப்பு கூறும் அடிப்படை கடமை களை முறையாக செய்யாததற்கு சமம்.

    தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக அரசு பள்ளிகளை உரு வாக்க இயலாத நிலையே உள்ளது. ஆசிரியர் சமுதாயம் பெரும்பாலும் அவர்களின் சொந்த தேவைகளிலும், உரிமையிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் கூட்டமைப்புகள் துறை ரீதி யான விஷயங்களில் தலையிட்டு குழப் பத்தை ஏற்படுத்துகின்றன.  இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது.

ஒழுங்கு நடவடிக்கை

    எனவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை செயலாளர், மாவட்டந் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த குழு அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக தொழில் செய்வது, பகுதி நேர வேலைகளை செய்வது, தனிப்பயிற்சி நடத்துவது, வீடுகளில் தனிப்பயிற்சி எடுப்பது போன்றவை பற்றிய தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து சம் பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது விசா ரணை நடத்தி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    அரசு பள்ளிக்கு உள்ளேயும், வெளி யேயும் ஆசிரியர்கள் மீதான முறை கேடுகள், புகார்களை தெரிவிக்க தொலை பேசி, வாட்ஸ்-அப் எண் போன்றவற்றை உருவாக்கி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியின் தரம், கற்பிக்கும் விதம், கல்வித்தரம் குறித்து  குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து அவர் களின் மேம் பாட்டிற்கான நடவடிக்கை களை முன் னெடுக்க வேண்டும். 

    இவற்றில் தயக்கம், சுணக்கம் காட்டும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப் பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆசிரி யர்கள் கூட்டமைப்பு தொடர்பான தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து, அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப் பட்டால் அந்த சங்கங்கள் மற்றும் அலு வலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நடைமுறைப் படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

No comments:

Post a Comment