பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளுக்கு குவியும் பாராட்டு
சென்னை, மார்ச் 2- சமுதாயத்தில் மதம், கடவுள், பக்தியின்பேரால் புரை யோடிப்போய் உள்ள மூடநம் பிக்கை, பெண்ணடிமைத்தனம், ஜாதி இழிவுகளைப்போக்கவும், சமத்துவமற்ற சமுதாயத்தில் சம நிலையை உறுதிப்படுத்தி, சமூகநீதி யைத் தழைக்கச் செய்வதில் தந்தை பெரியார் தம் இறுதி நாள் வரை யிலும் அரும்பாடுபட்டார். பகுத்த றிவு, சுயமரியாதை வழியில் மக்கள் நலனை முன்னிறுத்தி கொள் கையை வகுத்து, அதனை தம் வாழ் நாள் முழுவதும் பரப்பி வந்தார்.
தந்தைபெரியாரின் தொண்ட றப்பணிகளை, அவரது எழுத்து களை, உரைகளை, கட்டுரைகளை பல்வேறு தலைப்புகளில் பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவ னம், கழக (இயக்க) வெளியீடுகளாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. தந்தை பெரி யாரைத் தொடர்ந்து பொறுப் பேற்று இயக்கத்தை வழிநடத்தும் பணியில் அன்னை மணியம்மை யாரைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந் தைபெரியார் பணியை செவ்வனே தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அந்த வகையில் தந்தைபெரியார் உலகமயமாகிறார். பன்னாட்டள வில் தந்தைபெரியார் கருத்துகளின் தாக்கம் வலுப்பெற்று வருகிறது.
தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் 45ஆவது சென்னை புத் தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய் எம்சிஏ மைதானத்தில் 16.2.2022 முதல் நடைபெற்று வருகிறது. தி38அரங்கில் பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத்தின் புத் தகங்கள் அழகுற காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர், கல்வி வள் ளல் காமராசர், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆசிரியர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன மானப் பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ் செழியன் உள்ளிட்ட திராவிட இயக் கத் தலைவர்கள், நீதிக்கட்சித் தலை வர்கள், பன்னாட்டு பகுத்தறிவாளர் கள், அறிஞர் பெருமக்களின் புத்த கங்கள் மலிவுப்பதிப்புகளாக வெளியிடப்பட்டு வருகின்றன.
தந்தைபெரியாரின் பொதுவு டைமைச் சிந்தனைகள், ஜாதி ஒழிப் புப்புரட்சி, இராமாயணப்பாத்திரங் கள், கர்ப்ப ஆட்சி, இனி வரும் உலகம், கோயில்கள் தோன்றியது ஏன்?, நீதி கெட்டது யாரால்?, ஆச் சாரியார் ஆட்சியின் கொடுமைகள், அறிவு விருந்து, இந்து மதப் பண் டிகைகள், பகுத்தறிவு,பொன்மொழி கள், இளைஞர்களுக்கு அழைப்பு, இளைஞர்களுக்கு அறிவுரை, வட நாட்டில் பெரியார், பாரத ஆராய்ச்சி, இராமாயண குறிப்புகள், புராணம், தந்தைபெரியாரின் இறுதிப் பேருரை (மரணசாசனம்), நீதிமன் றங்களில் தந்தைபெரியார், எழுத் துச்சீர்திருத்தம், சுயமரியாதை திருமணம் ஏன்?, தத்துவ விளக்கம், தமிழுக்கு என்ன செய்தார் பெரி யார்?, அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துகள், சுவாமி சிவா னந்த சரசுவதியின் ஞானசூரியன், சிங்காரவேலரின் கடவுளும் பிர பஞ்சமும், பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்?, பன்னாட்டு பகுத்தறிவு அறிஞர்களின் புத்த கங்கள், கடவுளும் மனிதனும், மத மும் மனிதனும், அறிஞர் அண்ணா வின் ஆரியமாயை, தீபரவட்டும், சூழ்நிலை, வர்ணாசிரமம், திரா விடர் நிலை, இங்கர்சால், பெட் ரன்ட் ரசல் உள்ளிட்டவர்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
பெரியாரியல் பாடங்கள், பெரி யாரியல் தொகுதிகள், குடிஅரசு தொகுப்புகள், அசல் மனுதர்ம சாஸ்திரம், தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் தன் வரலாற்று நூல் அய்யாவின் அடிச்சுவட்டில் தொகுதிகள், புதிய வெளியீடாக தந்தைபெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?, கற்போம் பெரியாரியம், ஆர். எஸ். எஸ் என்னும் டிரோஜன் குதிரை, திராவிடம் வெல்லும் ஏன் எப்படி?, திராவிடம் வென்றது, ஒன்றிய பாஜக ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி, செப் - 17 சமூக நீதி நாள், இவர் தான் கலைஞர், சுயமரியா தைச் சுடரொளிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங் கள் பரபரப்பான விற்பனையில் உள்ளன. பெரியார் பிஞ்சு வெளி யீடுகளாக மழலையர்களுக்கான படக் கதை புத்தகங்கள் பல் வண்ணங்களில் எழிலுடன் கண் ணைக் கவர்கின்றன.
காண்போரைக் கவரும் வண் ணம் புத்தக அரங்கின் முகப்பில் தந்தைபெரியார் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அரு கில் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என அனைத்து தரப்பு வாச கப்பார்வையாளர்கள் குழுப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
தந்தை பெரியார் மறைவுற்று 40 ஆண்டு கள் உருண்டோடிவிட்ட பின்னரும், அவருடைய கொள் கைத் தாக்கம் பல்வேறு தரப்பிலும் பெருகிய வண்ணம் உள்ளது.
No comments:
Post a Comment