சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் காலம் காலமாக ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரு கிறது. ஒன்றியஅரசு சார்பில் தமிழ் நாட்டில் ஹிந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பெரும்பான் மையான மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திரை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஹிந்திப் படங்களில் இசை அமைத்திருந்த போதிலும் கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஹிந்தியில் ஒருவர் கேள்வி கேட்ட போது நீங்கள் தமிழர் தானே, இது தமிழ்நாடு தானே எதற்கு ஹிந்தியில் பேசு கிறீர்கள் என்று கூறி மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்று விட்டார்.
இளம் நடிகர்கள் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் பதித்த டி சர்ட் அணிந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இப்படி தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு உள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கை தான் வேண்டும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிக் கொள்கை வேண்டாம் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி தமிழ் நாட்டில் திமுக, பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற் பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு சிறு பான்மையினர் நல ஆணையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி சென்னை ராயப் பேட்டையில் நடந்தது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங் கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்பு அமைச்சர் க.பொன்முடி, ஊடகவிய லாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைன் நாட்டில் பொறியியலில் சேர்ந்து படிப்பு முடிக்காத மாணவர்கள் தமிழ்நாட்டில் படிப்பை துவங்கலாம். அதாவது தமிழ்நாட்டில் காலியாக உள்ள இடங்களில் இவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலக ளாவிய தொடர்புக்கு தமிழ், கூடுத லாக ஆங்கில மொழி அறிவு இருந்தால் போதுமானது. ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் பானிபூரிதான் விற் கிறார்கள். தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்க வேண்டாம் என எப்போதும் நாங்கள் கூறவில்லை.
மூன்றாவது மொழியாக எந்த மொழி வேண்டு மானாலும் படிக்கலாம் தவறில்லை. ஆனால் மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியை திணிப்பதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ் நாட்டில் ஹிந்தி படித்தால் என்ன வேலை கிடைக்கும்?'' என்றார்.
தமிழ்நாட்டில் ஹிந்தியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் க.பொன்முடியின் இந்த பதில் தற்போது விவாதமாகி உள் ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளை நுழைப்ப தற்கான முயற்சிகள் நடந்து வருவ தாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
ஹிந்தி மொழி, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டு வரும் போது தமிழ்நாட்டு அமைச்சரின் இந்த பதிலை அவர் களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment