புதுடில்லி, மார்ச் 3- விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எனும் பெட் ரோலிய எரிபொருள் விலை, 3.2 சதவீதம் உயர்த் தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அய்ந்தாவது முறையாக, விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உலகளவில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, ஏ.டி.எப்., விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த 116 நாட்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு 3,011 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது.
விமான சேவையை நடத்துவதில், எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவீதம் ஆகிவிடும் என்கின்றனர் இத் துறையினர்.
விமான எரிபொருள் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலை யில், விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய கட்டணங்களை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment