புதுடெல்லி, மார்ச் 4- உக்ரைன் மீது கடந்த 9 நாட்களாக ரசியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரசிய அதிபர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதிலும் குறிப்பாக உக்ரை னின் கிழக்கு பகுதியில் ரசிய எல்லைக்கு அருகில் அமைந்தி ருக்கும் கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர் களை வெளியேற்றுவது குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரசிய அதி பர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களை பத்திர மாக மீட்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ரசியா வழங்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ரசியாவிற்கு கிடைத்த தகவ லின்படி சில மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணையக் கைதிகளாக பிடித்து வைத்தி ருப்பதுடன் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாகவும், அவர்களை ரசிய எல்லைக்கு செல்ல விடா மல் உக்ரைன் ராணுவம் தடுத்து வருவதாகவும் பரபரப்பு குற்றச் சாட்டு ஒன்றை ரசியா வெளியிட்டுள்ளது. இந்திய மாணவர் களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment