உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்க ஏற்பாடு: அமைச்சர் பொன்முடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்க ஏற்பாடு: அமைச்சர் பொன்முடி

சென்னை, மார்ச் 2 உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில், ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மருத்துவம், பொறியியல் உள்பட பல்வேறு உயர் படிப்புகளை படிக்க சென்ற மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யா தொடுத்த போரின் காரணமாக தமிழ்நாடு மாணவர்கள் தங்கள் படிப்புகளை பாதியிலேயே விட்டுவிட்டு, வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் படிப்புகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு திரும்பிய தமிழ்நாடு மாண வர்கள் உயர்கல்வியை தொடர் வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம், உக்ரைனில் படிப்புகளை பாதியிலேயே விட்டுவிட்டு வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர் கல்வியை தொடருவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

உயர்கல்வியை தொடருவதற் கான சூழல் இருந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி ஏற்பாடு எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் ஆங்காங்கே நிறைய இடங்கள் இருக்கின்றன. 

அவர்கள் கேட்கும் கல்லூரிகள் கிடைக்காவிட் டாலும், இருக்கின்ற இடங்களில் அவர்களை சேர்த்து கொள்வதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற் கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment