பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 2 இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களையும், மீன்பிடி படகு களையும் விடுவித்திட நடவடிக்கை மேற்கொள் ளக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி பட குகளை உடனடியாக விடுவித்திட ஏதுவாக, இலங்கை அதிகாரிகளிடம் இதுகுறித்து விவாதித்திட ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படு வதையும் இந்திய பிரதமரின் உடனடி கவனத் திற்கு கொண்டுவர விழைகிறேன். நாகப்பட் டினம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீன வர்கள் தங்களது இயந்திர மீன்பிடி கப்பலில் 24.2.2022 அதிகாலையில் பாக். வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டு, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள மயி லிட்டி தளத்திற்கு கொண்டு செல்லப்பட் டுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் மற்றொரு மீன்பிடி படகில் மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
அதேபோன்று, 26.2.2022 அன்று ராமநாத புரம் மாவட்டத்திலிருந்து இயந்திர படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் 27.2.2022 அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையிலுள்ள கிராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் குறுகிய கால கட்டங்களில் தொடர்ந்து இது போன்று எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வு களும், கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன என்பதை குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளபோதிலும் இந்த நிலை தொடர்கிறது.
பாக். வளைகுடாவில் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் இத் தகைய நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படு வதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப் படுவதும், மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத் தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உட னடியாக விடுவிக்கும் வகையில், இப் பிரச்னையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒன்றிய வெளி யுறவு அமைச்சகத்திற்கு உத்தர விட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment