சென்னை, மார்ச் 3 வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவ லர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் கள் ஆகிய பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.
இப்பணியிடங்களுக்கு மூன் றாம் பாலினத்தவர்கள் விண்ணப் பிக்கும்போது ஆண்கள் என அடையாளப்படுத்தினால் ஆண் களுக்கான தேர்வு நடைமுறை களும், பெண்கள் என்று அடை யாளப்படுத்தினால், பெண்களுக் கான நடைமுறைகளும் பின்பற்றப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு, எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வுகளிலும், கட்-ஆப் மதிப்பெண்களிலும் சலுகை கள் வழங்க கோரியும் மூன்றாம் பாலினத்தவர்களான தேனியைச் சேர்ந்த ஆராதனா, சாரதா உள் ளிட்ட பலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதி பதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு பணியிடங்களை நிரப்பும் போது மூன்றாம் பாலினத்தவர் களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற் கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனா லும் இதுவரை தனி இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பெண்கள் என அடையாளப்படுத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆண்கள் என அடையாளப்படுத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தவொரு இடஒதுக்கீடோ அல் லது சலுகையோ வழங்கப்படுவ தில்லை. மூன்றாம் பாலினத்தவர்க ளுக்கு தனியாக குறிப்பிட்ட சத வீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு தடையும் இல்லை. எனவே, 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக ளில் மனுதாரர் களை தகுதி நீக்கம் செய்து தமிழ் நாடு சீருடை பணியா ளர் தேர்வு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மனுதாரர்கள் அனைவரும் இரண்டாம் நிலை காவலர் உள் ளிட்ட பணியிடங்களுக்கான ஆரம்ப கட்டத் தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி, தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் அவர்களுக்கு பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, 8 வாரங்களில் தேர்வு நடைமுறைகளை சீருடை பணியாளர்கள் தேர்வாணையத் தின் உறுப்பினர் செயலர் முடிக்க வேண்டும். எதிர்காலத்தில், அரசு பணி நிய மனங்களில் சலுகைகள் மட்டு மின்றி, மூன்றாம் பாலினத்த வர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தனி இடஒதுக்கீடு வழங்க வேண் டும். வ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment