சென்னை, மார்ச் 2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டு மல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியா ளராக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்டுள்ள இலச்சினையையும் வெளியிட்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர் களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாட நூலை வெளியிட்டு, இதற்கென உரு வாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஒருங்கி ணைக்கும். மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது: “இந்த நாள் என்னு டைய வாழ்விலே ஒரு பொன்னாளாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு என்னு டைய பிறந்தநாள் காண்கிறேன் என்பதற் காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தொடக்க நாள் இது. அதனால் தான் இது, ‘என்னுடைய வாழ்விலே கிடைத்திருக்கக்கூடிய பொன்னாள் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.
தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டிருக்கக்கூடிய நான் அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க, உருவாக்கிய திட்டம் தான் இந்தத் திட்டம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி, அனை வரும் அனைத்திலும் முதலாவதாக வந்தார்கள் என்ற நிலையை உருவாக்கும் திட்டம்தான் இந்தத் திட்டம், இந்தத் திட்டத்தினுடைய நோக்கம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சி யில், சிந்தனையில், செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றிட வேண்டும் என்கிற அந்த உணர்வோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லோரும் பள்ளிக் கல்வியை முடித்துவிடுகிறார்கள். கல்லூரிப் பட்டங்களையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக் குமே வேலை கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் அது ஒரு கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது. வேலை இல்லை என்று சொல்லும்போது, சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். “வேலைகள் நிறைய இருக்கிறது; ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் இல்லை என்று சொல்லக் கூடிய நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. இதைக் கேட்கும்போது மிக வருத்தமாகத் தான் இருக்கிறது. பட்டம் வாங்கியிருக்கிறார்கள், ஆனால், அந்தப் படிப்பு குறித்த தெளிந்த அறிவு எல் லோருக்கும் இல்லை என்று சொல்லப் படுகிறது.
இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 33 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று நாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள் கிறோம். இன்னொரு பக்கம், திறமைக் குறைவு பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம். பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமமே இல்லை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில், அப்படிக் கற்பவர்களுக்குத் தனித்திறமைகள் இல்லை என்பது பற்றியும் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
‘’இந்தியாவைப் பார்த்து உலக நாடுகள் பயப்படுகிறார்கள் - இந்தியாவில் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்து பயப்படவில்லை. இந்தியாவில் இருக்கும் இளைய சக்தியின் எண்ணிக்கையைப் பார்த்து பயப்படக்கூடிய பெருமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இந்த இளையசக்தி முழுமையான திறமை கொண்டதாக இருக்கிறதா என்று கேட் டால், இல்லை என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும்.
உலகப் போட்டியில் உங்களையும் ஒரு மனிதராக நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே திறமைசாலிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின் மூலமாக நிறுவனங்களை, தொழில் நிறுவனங்களை, அரசு நிறுவனங்களை, கல்வி நிறுவனங் களை ஒன்றிணைப்போம். அதற்கான முயற்சியில் நாம் முழுமையாக ஈடுபட்டி ருக்கிறோம். அரசு நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், தகுதியா னவர்களாக இளைஞர்களை உருவாக்கு வதை எனது முக்கியக் குறிக்கோளாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
உங்கள் முதலமைச்சரான இந்த மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் நான் மனதார வாழ்த் துகிறேன், போற்றுகிறேன், பாராட்டு கிறேன். வருங்காலச் சமுதாயம் உங் களுக்கு ஒளிமயமானதாக ஆகப் போகிறது. உங்களது வாழ்வில் மலர்ச்சி ஏற்படப் போகிறது.
இன்று முதல் நீங்கள் புதிய மனிதர்களாக மாறப்போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றும் வாய்ப்பை நான் பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடை கிறேன். பள்ளிகளில் ஏற்படுத்த இருக்கும் பயிற்சிகள், கல்லூரிகளில் தொடங்க இருக்கும் பயிற்சிகள் பற்றி விரிவாக அரசின் சார்பில் விரைவில் அதற்குரிய அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்படும். அந்த அறிவிப்பு அறிவின் உதயமாக அமையும்.
உங்களில் ஒருவனான நான். எனது பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததை எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். உங்கள் அனைவரையும் சந்தித்தற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அது மட்டுமல்ல, பிறந்த நாள் வாழ்த்தை இங்கே நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது என் செவிகளில் விழாமல் இல்லை, அந்த வாழ்த்தையும் ஏற்றுக் கொண்டு என் உரையை முடித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment