மிசா செல் முதல் கரோனா செல் வரை தளபதி அவர்களின் உழைப்பும் - உயர்வும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

மிசா செல் முதல் கரோனா செல் வரை தளபதி அவர்களின் உழைப்பும் - உயர்வும்

முனைவர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல், தஞ்சை

மிசா தந்த தலைவர்

1975 ஜூன் மாதம்  நெருக்கடி நிலை புகுத்தப் பட்டது.   அவசர நிலைப் பிரகடனத்தின் காரணமாக, 167 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மையாக இருந்த திமுக அரசு 1976 ஜனவரி 31-ஆம் நாளில் கலைக்கப்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்டதும் தி.மு.கவின் முன்னணித் தலை வர்களான முரசொலிமாறன், வை.கோ, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர். தளபதி மு..ஸ்டாலின் அவர்களைக் கைது செய்ய காவல் துறையினர் கோபாலபுரம் வீட்டிற்கு வந்த போது தளபதி அங்கு இல்லை, கட்சிப் பணியாக வெளியூர் சென்றுள்ளார் என்று சொன்னபோதும் நம்பாமல் வீடு முழுவதும் ஆராய்ந்துவிட்டு இல்லை என்று முடிவெடுத்துச் சென்றனர். மறுநாள் தளபதி வீட்டிற்கு வந்ததும் காவல் துறையினரிடம் நேரில் சென்று கைதாகுமாறு கலைஞர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். மிசா கைதிகளுக்கு சிறைச் சாலையில் நடந்த கொடுமைகளைச் சொல்வதற்கு சொற்களில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறையிலும், ஒவ்வொரு மாதிரியான கொடுமைகள் அரங்கேறின. மிகக் கொடூரமான சித்ரவதைகளைச் சென்னை சிறையில் இருந்தவர்கள் சந்திக்க நேரிட்டது.

வேப்பெண்ணெய் ஊற்றிய உணவு,  மணல் கலந்த சோறு என்று உண்ணும் உணவிலும் கொடுமைகள் அரங்கேறின. சென்னை மத்தியச் சிறையில் அன் றைக்கு சிறைக்காவல் அதிகாரிகளும், காவலர்களும் கைதிகளை அடித்து தாக்கிக் கொடுமைப்படுத்தியதும், அதன் விளைவாக சிட்டிபாபு போன்றவர்கள் உயிரிழந்ததெல்லாம் மிசாவின் மீள முடியா துயரங்கள்.

தளபதியை தாங்கிப் பிடித்த தலைவர்

இப்படிப்பட்ட இருண்ட சிறைக்குள் கைதுசெய்யப்பட்ட தளபதி ஸ்டாலின் அடித்து தள்ளிவிடப்படுகிறார். இவ ருக்கு முன் கைதுசெய்யப்பட்டு அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வரது கால்களை மிதித்து தடுமாறி கீழே விழுகிறார் தளபதி. அப்போது மிதிபட்ட கால்களுக்கு சொந்தக்காரரான திரா விடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தாங்கி பிடிக்கிறார் தளபதி ஸ்டாலினை, அன்று தாங்கிய கைகள் இன்றும் விடவில்லை, பக்கபலமாய், உறு துணையாய், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் இருந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு அந்த இருட்டு அறைக்குள் கைதாகி இருந்த முன்னணி தலைவர் களிடம் இந்த இளம்தலைவர் தளபதி ஸ்டாலின் பாடம் படிக்கலானார். அவர் களின் மொத்த அரசியல் அனுபவங் களும் இவருக்குள் அணுக்கமாகின. இந்த எமர்ஜென்சி மிசா தான் தமிழ் நாட்டின் இருள்நீக்க வந்த இளஞ்சூரியனாய் தளபதி மு..ஸ்டாலின் அவர்களை அடையாளப்படுத்தியது. காங்கிரசில் இருந்த ஆரிய ஆதிக்கம் தந்தை பெரியாரை தலைவராக்கியது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அண்ணாவை தலைவராக்கியது. தந்தை பெரியாரின் கொள்கையும், அறிஞர் அண்ணா வின் அணுகுமுறையும் முத்தமிழறிஞர் கலைஞரை தலைவராக்கின. அந்த வரிசையில் மிசா கொடுஞ்சிறை தந்த தலைவர் நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு..ஸ்டாலின்.

என்றும் களப்பணியில் முழுநேர தொண்டனாக

மிசா சிறைக்கொடுமையில் இருந்து விடுதலை யாகி முழுநேரத் தொண்டனாக களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி கழகத் தினரால் தேர்வுசெய்யப்பட்டார். 1973 இல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்று அவர் மேற்கொண்ட பிரச்சாரம் இளைஞரணியினரிடம் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறாக தளபதி அவர்கள் தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக கட்சியின் பொறுப்பு என்னும் படிக்கட்டுகளில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இளைஞர் அணிச் செயலாளர், பொருளாளர், செயல்தலைவர், தலைவர் என்று உயர்ந்து நிற்பவர்தான் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு. ஸ்டாலின். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு கட்டுக் கோப்புடன் திமுக என்னும் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்

இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சியில் தொடங் கப்பட்ட முதல் இளைஞரணி தி.மு..வில் இளைஞ ரணிதான். அந்த இளைஞரணியின் அமைப்புக் குழுவில் ஆறு நபர்கள் அமைப்பாளராக நியமிக்கப் பட்டனர். அதில் ஒருவர் தளபதி மு..ஸ்டாலின். இந்த இளைஞரணி அமைப்புக்குழு தமிழ்நாடு முழுவதும் பம்பரமாய் சுற்றி சுழன்று மாவட்டம், ஒன்றியம், நகரம் என்ற அளவில் தி.மு..வில் இளைஞரணிக்கென்றே ஓர் அமைப்பை உருவாக்கியது. இவ்வாறாக ஒவ் வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்த தன் காரணமாக 1984 இல் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பிறகு அந்த இளைஞரணிக்கென்று வெண் சீருடை, கறுப்பு சிவப்பு கழுத்து பட்டை, சிவப்பு தொப்பி என இளைஞர் அணியினரின் தோற்றத்தில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், இரண்டு மாவட்ட துணை அமைப்பாளர்கள், அவர்களுக்கு கீழ் அய்நூறு இளைஞர்கள் கொண்ட இளைஞர் படையை உருவாக்கி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச் சினார். 2003-இல் திமுகவின் துணைப் பொதுச் செய லாளராகவும், 2008 இல் திமுகவின் பொருளாளராக வும், 2017 இல் அவர் கட்சியின் செயல் தலைவராகவும் தி.மு.கழகத்தினரால் முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டார். 2018 இல் திமுக தலைவர் கலைஞர்  அவர் களின் மறைவிற்குப் பிறகு தி.மு..வின் பொதுக்குழு வினரால் அக்கட்சியின் தலைவராக தளபதி மு..ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயலால் உயர்ந்த தலைவர்

1989இல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கான பணியைத் திறம்பட செய்தார். 1996 இல் சென்னை மாநகரின் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் இவர்தான். மேயர் மு..ஸ்டாலின், பதவிக் காலத்தில் தான் சென்னை மாநகரில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன. மேலும் பல்வேறு திட்டங்களின் மூலம் மாநகரை தூய்மைப் படுத்தி நவீனப்படுத்தினார். தளபதி மேற்கொண்ட தன்னல மற்ற பணியால் சிங்காரச் சென்னையாகத் தரம் உயர்ந்தது சென்னை மாநக ராட்சி. 2006இல் தமிழ் நாட்டின் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராகவும், 2009 இல் தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராகவும் பணி யாற்றிய காலத்தில் தனது நிர்வாகத் திறமை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தி மக்களை நேசிக்கும் மக்கள் தலை வராக உயர்ந்தார்.

தி.மு..வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த தளபதி மு..ஸ்டாலின் 2016இல் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கி சென்னை வரை 234 தொகுதிகளில் பரப்புரை செய்தார். 2018 இல் நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப் போம் என்ற முழக்கத்தை முன் வைத்து தோழமைக் கட்சி தலைவர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி,  தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கிடக்கும் காவிரி ஆற்றில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்க திருச்சியில் தொடங்கி சென்னை வரை காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா... அரசை மக்க ளிடத்தில் அம்பலப்படுத்தினார். 2020 இல் தமிழ்நாடு முழுவதும் பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டங்களை திமுக-வின் சார்பில் நடத்தினார். அந்தக் கூட்டங்களில் கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் - சரிவுகள் - தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டப்பட்டது. இதுபோன்ற பல்வேறு செயல் களின் மூலம் தி.மு..விற்கான ஒப்பற்ற தலைமை, தமிழ்நாட்டிற்கான பாதுகாப்பு அரண் இவர்தான் என மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட்டு அந்த செயல்களின்மூலம் உயர்ந்த தலைவர் நம்முடைய முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்ற அந்த வார்த்தை 2021 மே மாதம் 7 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கப்பட்டது. ஆம் அன்றுதான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தளபதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் அதற்கு முன்பே கரோனா இரண்டாவது அலையிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான ஆலோசனைகளை முயற்சிகளைத் திட்டமிட்டு தொடங்கிச் செயல்படுத்தினார். ஆக்சிஜன் தட்டுப் பாட்டைச் சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட் டிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்தல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குதல், ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில் கூடுதல் அளவு ஆக்சிஜன் கோருதல் என பல்வேறு வழிகளில் ஆக்சிஜன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கினார். கரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் நிலையை சமாளிக்க பல அரசுக் கட்டடங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, பற்றாக்குறை இல்லாத அளவிற்கு படுக்கை வசதிகளை அதிகப்படுத்தினார்.

தீயாய்ப்பரவும் நோய் தீர்க்க தீவிரம்

கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப் படுத்த தீவிரம், தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடமிருந்து பெற தீவிர முயற்சி, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது உள்ளிட்ட நோய்த் தொற்றைப் போக்குவதற்கான அதிதீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின். கரோனா நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உதவி, கரோனா தொடர்பான மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்ய தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் 'வார் ரூம்' அமைத்தல், வார் ரூம்களுக்கு முதலமைச்சரே நேரில் சென்று பணிகள் சரியாக நடப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் உயிர் காப்பதில் ராணுவத்தைப் போல் செயல்பட்டார். இருபத்திநான்கு மணி நேரமும் இரவென்றும் பகலென்றும் பாராமல் செய்தி சேகரித்து மக்களுக் கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர் களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை, இழப்பீடுகள் ஆகிய பலன்கள் கிடைக்கச் செய்தார்.

மக்கள் மனநிலை புரிந்த மாண்பாளர்

கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்க தனியார் மருத்துவ மனைகள் பல்லாயிரக்கணக்கில் கட் டணம் வசூலித்த நிலையில், 'தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் கட்ட ணத்தை அரசே ஏற்கும் என்ற உத் தரவு. ஊரடங்கு போன்ற பேரிடர் நேரங்களில் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்ய அவர் களிடம் பணம் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, நான்காயிரம் ரூபாய் கரோனா கால நிவாரண நிதியாக வழங்கியது, கரோனா நோய் போக்கும் வேளையில் உயிரிழந்த மருத்துவர்கள், காவலர்கள் குடும்பங் களுக்கு தலா இருபத்தைந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்தது. கொரானா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் அய்ந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி மற்றும் அவர்களின் பட்டப்படிப்பு வரை கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்தது. கரோனா நோய் தீர்க்கும் பணியில் ஈடு பட்டிருந்த செவிலியர்கள், ஆய்வுக்கூட பணியா ளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், தூய்மைப் பணி யாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூபாய் பதினைந்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை ஊக்கத்தொகை அளித்தது. நெருக்கடியான நேரத்தில் தற்காலிகப் பணியாளர்களாக இருந்த ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது போன்றவை இந்திய ஒன்றியத்திலேயே கரோனா காலத்தில் முன்னு தாரணமாக செயல்பட்ட முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள்தான் என்று நாம் உரக்கச் சொல்லலாம்.

மக்களை நேசிக்கும் மக்களுக்கான தலைவர்

உலகத்திலே எந்த நாட்டுத் தலைவரும் செய்வ தற்கு நினைத்துக்கூட பார்க்காத செயலை மனதில் கொஞ்சமும் அச்சமில்லாமல் துணிச்சலோடு செய்த தலைவர் நம் தமிழ்நாட்டின் தலைவர், முதலைமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் தான். அது என்ன செயலென்றால் கவச உடை அணிந்து கரோனா வார்டுக்குள் சென்று அங்கிருந்த நோயாளிகளுக்கும், மருத்துவப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவித்த செயல் தான். இந்த ஒரு செய்கையின் மூலம் தானும் ஒரு முன்கள வீரர் என்பதைக் காட்டிய மக்களை நேசிக்கும் மக்களுக்கான தலைவர் நம்முடைய முதல்வர்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அறிஞர் அண்ணா சொன்னார், அவர் வழி வந்த தி.மு.., இன்றைக்கு அதன் தலைவராக, தமிழ் நாட்டின் முதல்வராக இருக்கும் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்துச் செயல்படுகிறார். இந்த நிலைப்பாட்டின் காரணமாக அவரது ஆளுமையில் கடினமும் உறுதி யும் காணப்படுகிறது. அதேவேளையில் மனிதர் களிடம் பழகும் தன்மையில் அவை காணப்பட வில்லை. தன்னைத் தலைவராக, நாட்டின் முதல்வராக ஏற்றுக்கொண்ட இந்த தமிழ்ச் சமுதாய மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும், ஊர் போற்றும் உன்னத தலைவராம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நம் முதல்வரை, அவரது பிறந்த நாளில் வாழ்த்திடுவோம், போற்றுவோம், கொண் டாடுவோம்.

No comments:

Post a Comment