புகாரெஸ்ட், மார்ச் 2- உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள், அண்டை நாடான ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து மீட்பு விமானங் கள் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள். இந்த நிலையில் ருமேனிய எல் லையில் இருந்து புகா ரெஸ்டுக்கு செல்ல இந் திய மாணவர்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து புகா ரெஸ்டில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதா வது:-
உக்ரைன்-ருமேனிய எல்லையில் இருந்து புகா ரெஸ்டுக்கு இந்திய மாண வர்களை அழைத்து செல்ல சிலர் பணம் வசூ லிப்பதாக எங்கள் கவனத் துக்கு வந்தது.
புகாரெஸ்டுக்கு அழைத்து செல்வது உள்பட இந்திய தூதரகம் அளிக்கும் அனைத்து சேவைகளும் இலவசம் ஆகும். எனவே, இதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.
இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment