கூட்டுறவு நியாயவிலைக் கடைகள்: நேரம் மாற்றம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

கூட்டுறவு நியாயவிலைக் கடைகள்: நேரம் மாற்றம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மார்ச் 2  பொதுமக்கள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் வாங்கும் வகையில், தமிழ்நாட்டில் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு துறை ஆணையர் ராஜாராம், அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: 

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாய விலை கடை களுக்கும் (கூட்டுறவு நியாயவிலைக் கடைகள்) அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர, இதர பணி நாட்களில் நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கெ னவே நியாய விலை கடைகள் ஒவ் வொரு பணி நாட்களிலும் செயல் படும் வேலை நேரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் திறக்கப் பட்டு இருக்கும்.

சென்னை தவிர, மற்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் திறந் திருக்கும். நியாய விலை கடைகள் செயல்படும் வேலை நேரம் பெரும் பாலான கடைகளில் பின்பற்றப் படுவதில்லை. 

மாவட்டங்களில் நியாய விலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரம் பெரும்பாலான கடை பணியாளர் களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை. இது பற்றி, சம் பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மேலும் அனைத்து நியாய விலை கடைகளிலும், நியாய விலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டை தாரர்கள் அறியும் வண்ணம் கடையின் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும். குறித்த நேரத்தில் நியாய விலை கடைகள் திறந்து செயல்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அதிகாரிகள், துணை ஆணை யாளர்கள் ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறியுள்ளார். 

கரோனா தொற்று பரவல் எதிரொலியாக கூட்டுறவு நியாய விலைக் கடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டிருந்த நிலையில், தற் போது மீண்டும் பழைய நடை முறையை பின்பற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. 

No comments:

Post a Comment