வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறி விடுகிறார்கள் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் தினம் தினம் அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் தரப்பிலும் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் உக்ரைனில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருவது தெரிய வந்தது. அதில் பெரும் பாலானோர் மருத்துவம் படித்து வருகிறார்கள். உக்ரைனில் நுழைவுத் தேர்வு இன்மை மற்றும் மருத்துவப் படிப்புக்கான செலவு குறைவு என்பதால் அதிக மாணவர்கள் உக்ரைனைத் தேர்ந்தெடுக் கிறார்கள்
இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வில் 7 லட்சம் முதல் 8 லட்சம் மாணவர்கள் வரை தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், 90 ஆயிரம் மருத்துவ இடங்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில் 20 ஆயிரம் இடங்களே கிடைக்கின்றன. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படித்துமுடிக்க, சுமார் 30 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. மருத்துவக் கனவை கைவிட முடியாத மாணவர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிறார்கள்.
உக்ரைனில் மருத்துவம் படிப்பவர்களில் இந்திய மாணவர்கள் 25 சதவிகிதம் பேராக உள்ளனர். உக் ரைனில் 40-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அங்குள்ள 7 கல்லூரிகளில் இந்தியர்கள்தான் அதிகம் படிக்கின்றனர். உக்ரைன் மட்டுமின்றி, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். இங்கெல்லாம் இந்தியாவை விட மருத்துவம் படிக்கக் குறைந்த அளவிலேயே செலவாகிறது. வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்த பிறகு இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற இந்திய மருத்துவக் கழகம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அப்படித்தான் வெளிநாட்டில் படித்த பலரும் தற்போது வரை தேர்வு எழுதி வருகிறார்கள். இந்தியா மிகப்பெரிய மருத்துவ மய்யம் என்பதால், பல வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இந்தி யாவில் இருக்கும் பாடங்களையே அதிகம் வைத்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறி விடுகிறார்கள். அவர்களிடம் பணம் உள்ளதால் அவர்கள் வெளிநாடு களுக்குச் சென்று படிக்கின்றனர். அங்குள்ள சூழல்களை கவனிக்கத் தவறி விடுகின்றனர். இருப் பினும் மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏன் வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த இது சரியான நேரம் அல்ல'' என்றார்.
'நீட்' தேர்வில் 420 மதிப்பெண் எடுத்து தமிழ்நாடு அளவில் 4554ஆம் இடத்தில் வந்த அழகுலட்சுமி மருத்துவக் கல்லூரியில் (MBBS) இந்தியாவில் இடம் கிடைக்காமல் உக்ரைனில் படிக்கிறார். அதே 'நீட்' தேர்வில் 108 மதிப்பெண் எடுத்து 25,596ஆம் இடத்தில் வந்த மாணவர் பணம் கொடுத்து NRI (வெளிநாட்டில் வாழும் இந்தியர்) இந்தியாவில் MBBS
படிக்கிறாரே, அது எப்படி?
தகுதி - திறமை பேசும் தறுதலைகள் பதில் சொல்லட்டும்!
No comments:
Post a Comment