மாஸ்கோ, மார்ச் 4- உக்ரைன் மீது ரசிய படைகள் 9ஆவது நாளாக உக்கிரமான தாக் குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏரா ளமான ராணுவ இலக்கு களை ரசிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரசிய படைக ளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோத லில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரசிய படை யெடுப்பை எதிர்த்து ரசியாவில் பல இடங்க ளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ரசியாவின் இரண்டா வது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கில் நடைபெற்ற போராட்டத்தில், போர் எதிர்ப்புப் போராட்டக் காரர்க ளைக் கைது செய்துள்ள தாக ரசிய காவல்துறையினர் தரப்பில் கூறப் பட்டுள்ளது.
போருக்கு எதிரான பதாகைகளை வைத்திருந்த போராட்டக்காரர் கள் ரசிய அரசுக்கு எதி ராக முழக்கமிட்டனர். கடந்த வியாழன் முதல் ரசியாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 7,615 பேர் கைது செய்யப்பட்டிருக் கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிய அதிபர் புதினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனைக் காலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுப வித்து வருவது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment