வாசிங்டன், மார்ச் 4- உக்ரைன் மீது ரசிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. உக் ரைன் நாட்டின் ஏராள மான ராணுவ இலக்கு களை ரசிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரசிய படைக ளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோத லில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரசிய தாக்குதலால் கடுமையான பொருளா தார இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. ஆயுத உதவி, நிதி உதவியையும் அளித்து வருகின்றது.
இந்த நிலையில், உக் ரைனுக்கு உதவ பன் னாட்டு நிதியம், உலக வங்கி முடிவு செய்துள் ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
இது குறித்து பன் னாட்டு நிதியத்தின் நிர் வாக இயக்குநர் கிறிஸ் டாலினா ஜார்ஜியவா, உலக வங்கி குழும தலை வர் டேவிட் மல்பாஸ் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்ட னர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ரசியா-உக்ரைன் போரால் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. பணவீக்கம் மேலும் உய ரும் அபாயம் நிலவுகிறது. இது, ஏழைகளை கடுமை யாக பாதிக்கும். இந்தப் போர் நீடித்தால், நிதிப் சந்தைகளில் பாதிப்பு தொடரும்.
உக்ரைன் கோரிக் கையை ஏற்று அவசர நிதி அளிக்க பன்னாட்டு நிதி யம் பரிசீலித்து வருகிறது. அதுபோல், உலக வங்கி குழுமம், 300 கோடி டாலர் நிதிதொகுப்பை தயாரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment