5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேற்றம் அய்.நா. அகதிகள் ஆணையம் தகவல்
கீவி, மார்ச் 2- ராணுவ நிலைகள் மட்டு மின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரசியா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக அய்.நா. சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.உக்ரைனில் ரசிய தாக்குதலுக்குப் பிறகு 1,60,000 பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர்
போர் தீவிரமடையும் பட்சத் தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து வெளியேறு வோர், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற் றும் மால்டோவா ஆகிய நாடு களில் எல்லைகளில் உள்ள சோத னைச் சாவடிகளில் தஞ்சம் அடைந் துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டு எல்லையில் 2,81,000,பேர் குவிந்துள்ளனர்.
அந்த பகுதியில் நீண்ட வரிசை யில் கார்கள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன. பலர் நடந்தே எல்லைகளை கடந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment