சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய (2.3.2022) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 55 ஆயிரத்து 474 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 52 ஆயிரத்து 851 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய கரோனா பாதிப்பு எண்ணிக்கையான 348 அய் விட சற்று குறைவு.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,009 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 946 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,07,595 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 4 ஆயிரத்து 437 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நேற்று 92 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று 89 ஆக குறைந்தது.
மேலும், கோவையில் 45 பேருக்கும், செங்கல்பட்டில் 36 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
No comments:
Post a Comment