சென்னை, மார்ச் 2- நாடு முழுவதும் வெற்றிகரமாக வணிகம் புரிந்து வரும் ப்ரெஷ் டு ஹோம் நிறுவனம் தற்போது தங்களது வளர்ச்சியின் மற்றொரு பகுதியாக தனது வணிக எல்லைக்களை மேலும் விரிவுபடுத்துகிறது.
இணையம் மூலம் பிரெஷ் மீன் மற்றும் இறைச்சி விற்பனையில் முன் னணி நிறுவனமான ப்ரெஷ் டு ஹோம், தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் சேவைகளை வழங்குவதன் மூலமும், தமிழ்நாட்டில் 15 புதிய ப்ரெஷ் டு ஹோம் விற்பனையகங்களை அமைப் பதன் மூலமும் அதன் சந்தை இருப்பை வலுப்படுத்தவுள்ளது.
மலிவு விலையில் தரமான மற்றும் பாதுகாப்பான இறைச்சி மற்றும் கடல் உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ப்ரெஷ் டு ஹோம் இந்த விரிவாக்கத்தை மேற்கொண்டு வரு கிறது. வாடிக்கையாளர்களுக்கு 100% புதிய மற்றும் முற்றிலும் இரசாயனமற்ற இறைச்சி உணவு வகைகளை அவர்களது வீட்டு வாசலிலேயே வழங்கும் நோக்கு டன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகி றது.
இந்தியாவில் உள்ள 300க்கும் மேற் பட்ட கடற்கரைகள் மற்றும் பண்ணை களில் உள்ள 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளிட மிருந்து நேரடியாகப் பெறப்பட்ட மீன் மற்றும் இறைச்சிகளை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது என இந்நிறு வனத்தின் நிறுவனர் ஷான் கடவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment