சென்னை, மார்ச் 2- இந்தியாவின் முன்னணி ‘துரித விற்பனை மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ்’ நிறு வனமான டன்ஸோ, தனது மளி கைப் பொருட்கள் வழங்கும் ‘டன்ஸோ டெய்லி’ சேவையை தமிழ்நாட் டிற்கு கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை தொடர்ந்து அடுத்தடுத்த நகரங்களுக்கும் செல்லவிருக்கிறது.
அதிநவீன தொழில்நுட்ப நெட் வொர்க் முறையில் இயங்கும் சிறிய கிடங்குகளின் மூலம் ஆர்டர்களை 2 நிமிடத்திற்குள் செயல்படுத்தி, ‘டன்ஸோ டெய்லி’ மளிகை மற் றும் அத்தியாவசியப் பொருட்களை 15 முதல் 20 நிமிடத்திற்குள் உட னடியாக வழங்கும். உள்ளூர் வாடிக் கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தின் அடிப்படையில், ‘டன்ஸோ டெய்லி’ அவர்களது தினசரி மற்றும் வாராந்திர தேவை களை தேர்வு செய்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வேகமாகவும் வசதியாகவும் ஆர்டர் செய்ய முடி யும்.
2021ஆம் ஆண்டு பெங்களூரு வில் துவங்கப்பட்டதிலிருந்து, ‘டன்ஸோ டெய்லி’யின் மாதாந்திர ஆர்டர்களின் எண்ணிக்கை 1 மில் லியனாக வளர்ந்துள்ளது. தற் போது சென்னை மற்றும் புனேவில் இந்த சேவை விரிவாக்கப்படவி ருப்பதை அடுத்து இந்த எண் ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆண்ட் ராய்டு மற்றும் அய்ஓஎஸ்இல் டன்ஸோ செயலியின் மூலம் இந்த சேவையை பெறலாம். டன்ஸோ டெய்லி சேவை இந்தியாவின் முதல் 10 முக்கிய நகரங்களில் 2022ஆம் ஆண்டின் முதல் பாதிக் குள் வெளியிடப்படவுள்ளது.
சென்னையில், டன்ஸோ டெய்லி 15க்கும் அதிகமான சிறிய கிடங்குகளுடன் தனது செயல் பாடுகளை மேற்கொள்வதால், நகரை சுற்றியுள்ள அனைத்து பகு திகளுக்கும் தினசரி தேவைகளை உடனடியாக வழங்க முடியும். சென்னையில் இதன் பணிகளை மேற்கொள்ள ஒரு முழுமையான குழுவை உருவாக்க டன்ஸோ திட்டமிட்டுள்ளது, அதில் 35 சதவிகிதம் பேர் பெண்களாக இருப்பார்கள், என்று டன்ஸோ நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனரு மான கபீர் பிஸ்வாஸ் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment