தமிழ்நாட்டில் ''கீழறுப்பு வேலை''களைச் செய்ய ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு செயலாற்றுகிறது! ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு என்றைக்கும் நாங்கள் அரணாக இருப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

தமிழ்நாட்டில் ''கீழறுப்பு வேலை''களைச் செய்ய ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு செயலாற்றுகிறது! ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு என்றைக்கும் நாங்கள் அரணாக இருப்போம்!

 முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, மார்ச் 4   தமிழ்நாட்டில்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குலைப்பதற்கு ஏதாவது கீழறுப்பு வேலைகளைச் செய்யலாமா என்று ஒரு பெரிய திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலே உரு வாக்கிக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள் சும்மா இருந்தாலும், கருப்புச் சட்டைக்காரர்கள் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் - நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்; சிறைச்சாலைக்குப் போவதற்கும் அஞ்சமாட்டோம். திராவிட மாடல் ஆட்சிக்கு என்றைக்கும் நாங்கள் அரணாக இருப்போம் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.. சார்பில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிறந்த நாள் - வாழ்த்தரங்கம்!

கடந்த 1.3.2022 மாலை சென்னை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேளச்சேரியில்  உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்தரங்கத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

விரைவாக முடிவெடுத்து மீண்டும் ஆளுநருக்கு மசோதா அனுப்பப்பட்டது!

ஆனால், நம்முடைய முதலமைச்சர் என்ன செய்தார்?

அமைதியாகவும், அடக்கமாகவும், அதேநேரத் தில், உறுதியாகவும் எப்படி இருப்பார் என்பதை இங்கே தலைவர்கள் தங்களுடைய உரையில் குறிப்பிட்டார்கள். அதைக் கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

உடனடியாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்; அந்தக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை  ஆறு நாள்களில் கூட்டினார். ஒரு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பினார்.

அந்த மசோதா அனுப்பப்பட்டு மூன்று வாரங் களுக்குமேல் ஆகின்றது. ஆனால், இன்னமும்  அந்த மசோதாவை ஆளுநர் வைத்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கீழறுப்பு வேலைகளைச் செய்ய ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு செயலாற்றுகிறது!

காரணம் என்ன நண்பர்களே,

இப்பொழுது   இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்ற  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குலைப்பதற்கு ஏதாவது கீழறுப்பு வேலைகளைச் செய்யலாமா என்று ஒரு பெரிய திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், முதலமைச்சருடைய ஆற் றல் மிகத் தெளிவானது. அவருக்கு எப்பொழுது, எப்படிப்பட்ட வியூகத்தை வகுக்கவேண்டும் என்று நன்றாகத் தெரியும்.

அவருக்கு  ஒத்துழைப்புக் கொடுப்பதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலை வர்களும், பொதுமக்களும் இருக்கிறார்கள்.

'திராவிட மாடல்' ஆட்சிக்கு என்றைக்கும் நாங்கள் அரணாக இருப்போம்!

அதற்கு ஆதாரம் என்னவென்றால், சட்டப் பேரவையில் பெற்ற வெற்றியைவிட, உள்ளாட்சித் தேர்தலில் பெற்றிருக்கின்ற வெற்றிக்கு, அதற்காக எங்களுடைய முதலமைச்சரை எங்கள் தலையின் மேல் தூக்கிப் பிடிக்கிறோம்; திராவிட மாடல் ஆட் சிக்கு என்றைக்கும் நாங்கள் அரணாக இருப்போம்.

சட்டப்பேரவையில், எதிர்க்கட்சியாக .தி.மு.. ஓரளவிற்கு இடம்பெற்றது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுடைய நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். பரிதாபத்திற்குரியவர்கள் அவர்கள் - இன்னும் 27  அமாவாசை'களை எண்ணிக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் - இருட்டுக்கும் அப்படி ஓர் இணைப்பு!

அது என்ன கணக்கோ தெரியவில்லை 27 ‘அமாவாசை' என்று. அப்படி சொல்லும்பொழுது, பவுர்ணமி என்று சொல்லக்கூடாதா? அது என்னஅமாவாசை?' இருட்டுக்கும் உங்களுக் கும் அப்படி என்ன  ஓர் அற்புதமான இணைப்பு.

இன்னொருவர் சொல்கிறார், இன்னும் 2 ஆண்டுகாலம்தான் இந்த ஆட்சி என்றுஆரூடம்' கணிக்கிறார்.

எவ்வளவு ஆசை பாருங்கள்!

ஏனென்றால், ஒரே தேர்தலாம். நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடுமாம். எவ்வளவு ஆசை பாருங் கள் அவருக்கு.

எங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது; நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று திட்ட மிடுகிறார்கள்.

அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் நண் பர்களே,  அதை அலட்சியப்படுத்தக் கூடாது நீங்கள்.

''நான் இரண்டு எம்.எஸ். டிகிரி படித்தவன்; நான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரன். கோட்சே, காந்தியை சுட்டுக் கொன்றது தப்புங்க ; இராமசாமிசாமி நாயக்கரைப் போட்டுத் தள்ளியிருக்கவேண்டும்; அம்பேத்கரைப் போட்டுத் தள்ளியிருக்கவேண்டும்'' என்று பார்ப்பனர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.  இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வந்தது. அப்படி சொன்னவரை கைது செய்திருக்கிறார்கள் என்றாலும்,

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென் றால், ஏன் இப்படியெல்லாம் திடீரென்று பேசு கிறார்கள்?

அதற்கு முன்பு காந்தியைப்பற்றி அவதூறாகப் பேசிய அம்மையாரை நாங்கள் மாமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கின்றோம் என்று துணிச்சலாக சொன்னது ஒரு பக்கம்.

ஆர்.எஸ்.எஸினுடைய  மிக நுணுக்கமான வியூகம்!

அதற்குப் பிறகும் இப்படி பேசுகிறார்கள் என்றால், அவர்களுடைய நோக்கம் நண்பர்களே, இது ஆர்.எஸ்.எஸினுடைய  மிக நுணுக்கமான ஒரு வியூகம்.

பெரியாரை, அம்பேத்கரைப்பற்றி இப்படி பேசி னால், அதுவும் தலைநகரில் பேசினால், நம்மவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்; ஆத்திரப்படுவார்கள்;  அவர்கள் ஆத்திரப்பட்டால், அதன்மூலம் கலவரம் உண்டாக்கலாம்; அந்தக் கலவரத்தைக் காட்டி, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; ஆட்சி யைக் கலைக்கிறோம் என்று சொல்வதற்கு, இப் பொழுதே அவர்கள் அடித்தளம் போடுகிறார்கள்.

அதைப் புரிந்துகொண்டுதான் நண்பர்களே, அமைதியாக ஆர்.எஸ்.எஸின் வியூகத்தை உடைக் கக்கூடிய அளவிற்கு நம்முடைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அதேநேரத்தில், அந்த ஆபத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தினமலரில் வந்த செய்தி!

இன்று காலையில் வந்த 'தினமலர்'  நாளிதழில் வந்த ஒரு செய்தி:

‘‘தி.மு..வின் பொய் பிரச்சாரம்:

முறியடிக்க பா... புதிய வியூகம்!''

என்ற தலைப்பில்தினமலர்' நாளிதழில் செய்தி.

என்ன புதிய வியூகம்!

அந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்!

''தமிழகத்தில் பா..,வுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், தி.மு.., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், சமூக வலைதளங்கள் வாயிலாக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.அதற்கு பதிலடி கொடுக்க, பா..,வும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, சென்னை, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், பிப்., 27 ஆம் தேதி மாலை, தமிழக பா.., சார்பில், சமூக ஊடக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்லமா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.., தலைவர் அண்ணாமலை, பா.., சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் பா..,வுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிடுவோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தலைவர்கள், 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. எனவே, பா.., மீது சுமத்தப்படும் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழ கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, அவற்றினால் அடைந்த பயனாளிகளின் விபரங்களை, சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் சேர்க்க வேண்டும்'  என, தெரிவித்துள்ளனர்.''

மேலும், ‘தி.மு..,வின் ஹிந்து விரோத செயல் களை தெரிவிப்பதுடன், தி.மு..,வுக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் பா..,வினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால், அவர்களை பாதுகாக்க, கட்சி  துணை நிற்கும்' என்றும் தெரிவித்துள்ளனர். 

கொலைக் குற்றத்தைத்

தூண்டக் கூடிய பேச்சு அல்லவா?

மேடையில் ஒருவர் பேசும்பொழுது ஆளைக் கொல்லு என்று பேசினால், அது சட்ட விரோதமான பேச்சு அல்லவா? கொலைக் குற்றத்தைத் தூண்டக் கூடிய பேச்சு அல்லவா? அதற்காக நடவடிக்கை எடுத்தால், அந்தக் கட்சி குற்றவாளிகளைக் காப்பாற்ற துணை நிற்குமாம்.

பழைய கிரிமினல்களும்,

புதிய கிரிமினல்களும்தானே...

பா...வில் சேருகிறவர்கள் எல்லாம் யார்?

பழைய கிரிமினல்களும், புதிய கிரிமினல்களு ம்தானே - முருகன் முன்னிலையில் ஒருவர் பா... வில் சேருவதற்காகச் செல்கிறார்; காவல்துறையினர் அங்கே போகிறார்கள், அவர்களைப் பார்த்ததும், புதிதாகக் கட்சியில் சேர வந்தவன் ஓடுகிறான்.

ஏன் அவன் ஓடுகிறான் என்று பார்த்தால், அவன் தேடப்படுகின்ற ரவுடி என்று வந்த செய்தி பத்திரிகை களில் உள்ளது.

பொய்யான செய்திகளைப் பரப்புபவர்கள் திரா விட முன்னேற்றக் கழகத்துக்காரர்களோ, சமூக வலை தளங்களில் இருப்பவர்களோ அல்ல.

எந்த அளவிற்கு பா...வினர் பொய்யான செய்தி களைச் சொல்லுகிறார்கள் என்பதற்கு உதாரணம், இங்கே உரையாற்றும்பொழுது சகோதரர் பால கிருஷ்ணன் ஒன்றைச் சொன்னார்.

மத மாற்றம் என்று சொல்லி

தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கலாம் என்று நினைத்தார்கள்!

மத மாற்றம் என்று சொல்லிக்கொண்டு திருக்காட்டுப்பள்ளியில், மைக்கேல்பட்டியில் நடைபெற்ற சம்பவத்தில், அரசாங்கம் எப்படி நடந்துகொண்டது  -  எந்தப் பிரச்சினையும் தங் களுக்குக் கிடைக்கவில்லை என்றால், தமிழ் நாட்டில் இப்படி ஒரு கலவரத்தை உண்டாக்கலாம் என்று நினைத்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ். நீதிபதிகள்!

லாவண்யா மரணம் குறித்து சி.பி.அய். விசாரணை தேவையில்லை; மாநில அரசின் காவல்துறையே விசாரணை செய்யும் என்று மாநில அரசு சொல்லிற்று.  ஆனால், அதை கேட்காமல், உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

இதுபோன்று வழக்கு வந்தால், எங்களிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்வதற்கே பழைய ஆர்.எஸ்.எஸ். நீதிபதிகள் இருக்கிறார்கள்.

எனவே, நாம் மக்களின் ஆதரவு இருப்பதினால், அரசியலில் வெற்றி பெறுகிறோம்.

ஆனால், அடித்தளத்தில் ஒரு பெரிய கூட்டணி உருவாகி இருக்கிறது. ஒரு பக்கத்தில் பழைய ஆர்.எஸ்.எஸ். நீதிபதிகள்; அவர்கள் யார் யார் என்று பெயர் சொல்லவேண்டிய கட்டம் வரும்.

மற்றவர்கள் சும்மா இருந்தாலும், கருப்புச் சட்டைக் காரர்கள் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் - நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்; சிறைச்சாலைக்குப் போவ தற்கு அஞ்சமாட்டோம்.

சட்டக் கோர்ட்டுதான்- நீதி கோர்ட்டு அல்ல என்றார் தந்தை பெரியார்!

நீதிமன்ற அவமதிப்பு என்று தந்தை பெரியாரை அழைத்தார்கள் நீதிமன்றத்திற்கு.

நீதிமன்றத்திற்குச் சென்ற பெரியார் அவர்கள், ''நீங்கள் அளிக்கும் தண்டனையை எதிர்த்து வாதாட மாட்டேன்.

இது சட்டக் கோர்ட்டுதான். நீதி கோர்ட்டு அல்ல.

தி கோர்ட் ஆஃப் லா தான் - கோர்ட் ஆஃப் ஜஸ்டீஸ் அல்ல'' என்று உறுதியாகத் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதம்!

இதோ என்னுடைய கையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை 'விஜயபாரதம்'. செய்தியோடு படங்களை வெளியிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் என்று சொல்லி, வடபுலம், ஆந்திராவிலிருந்தும் கொண்டு வந்து, திடீரென்று ஒரு நாள், முதலமைச்சர் வீட்டிற்குமுன் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று பெண்கள் மற்றும் சிலரை அனுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காவல்துறையினர் அவர்களை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்தவுடன்,

.பி.வி.பி. மாணவர்களை விடுதலை செய்யக் கோரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மனு அளித்தனர் .பி.வி.பி. தேசிய அமைப்பாளர் ஆஷிஷ் சவுகான்,  தென்பாரத இணை அமைப்பாளர்  பாலகிருஷ்ணா ஆகியோர்.

எந்த அறிவிப்பும் கொடுக்காமல், முதலமைச்சர் வீட்டிற்கு  முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால், அவர்களுடைய நோக்கம் என்ன?

உடனே ஆளுநர் மாளிகைக்குச் சென்று  மனு கொடுக்கிறார்கள்; ஆளுநர் மாளிகை மற்றவர் களுக்குத் திறக்காது - அவர்களுக்காக உடனடியாகத் திறக்கப்பட்டு இருக்கிறது.

சரி, இதேபோல, ராஜ்பவனுக்கு முன்பாக ஆர்ப் பாட்டம் செய்தால், அவர்களை விட்டுவிடுவார்களா?

மிகப்பெரிய அளவிற்கு ஒரு வலை பின்னப்படுகிறது

ஆகவே, மக்கள் மன்றம் தயாராக இருக்கிறது; சட்டமன்றம் தீர்மானம் போடுகிறது. நீதிமன்றத்தி னுடைய பெரும்பகுதி சரியாக இருக்கிறது. ஆனால், அங்கே பழைய ஆர்.எஸ்.எஸ். நீதிபதிகள் இருக் கிறார்கள். உயர்நீதிமன்றத்திலும் இருக்கிறார்கள், உச்சநீதிமன்றத்திலும் அதனுடைய பிரதிபலிப்பு இருக் கிறது என்று சொல்லும்பொழுது நண்பர்களே, மிகப்பெரிய அளவிற்கு ஒரு வலை பின்னப்படுகிறது.

''பா..., ஆர்.எஸ்.எஸ்., சம்பந்தப்பட்ட வழக்கு என்றால், எங்களிடம் கொண்டு வாருங்கள்; உடன டியாக அந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்வோம்; உடனே அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று தீர்ப்பு சொல்வோம்'' என்றெல்லாம் நிலைமை உள்ளது.

எனவேதான், நாம் வாக்களித்திருக்கிறோம்; வெற்றி பெற்றிருக்கின்றோம். மிகப்பெரும்பான்மை யான இடங்களைப் பெற்றிருக்கிறோம். சட்டப்படி உள்ள ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னாலும், இதற்குக் குறுக்குவழியில் எப்படியெல்லாம் இடையூறுகளை செய்யலாம் என்று அவர்கள் திட்டம் போடுகிறார்கள்.

அன்றும் - இன்றும் - என்றும்!

ஆனால், ஒன்றை நான் சொல்லி, என்னுரையை நான் நிறைவு செய்கிறேன்.

அண்ணா அவர்கள், தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அப்படி வைக்கும் நேரத்தில்,

''நான் ஓராண்டு காலத்தில் மூன்று செயல்களை முடிக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அந்த மூன்றையும் முடித்துவிட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

அண்ணா அன்றைக்குச் சொன்னது, அன்றும் - இன்றும் - என்றும் அரசியல் பாடங்களாக இருக்கக் கூடிய அளவிற்கு மிக முக்கியமானது.

கலைவாணர் அரங்கத்தில்தான் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அண்ணாவினு டைய உரையை நான் கேட்டுக்கொண்டிருந்தவன்.

அண்ணாவின் கர்ஜனை

''கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், தாய்த் திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதைவிட எனக்கு என்ன வாழ்வு? என் உடல்நிலையைப்பற்றி எனக்குக் கவலையில்லை'' என்று அண்ணா அவர்கள் சொன்னபொழுது, அங்கே இருந்த அனைவருடைய கண்களும் கலங்கின.

''இதுதான் எனக்கு வாழ்நாளிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான நாள்'' என்று  சட்டமன்றத்திலேயே சொன்னார்.

அப்படிப்பட்ட  முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொன்னார்,

நான் மூன்று காரியங்களைச் செய்தேன், இந்த ஓராண்டு காலத்தில்.

ஒன்று,  சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தேன்.

இரண்டு, தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தேன்.

மூன்று, இருமொழிக் கொள்கைகள் - தமிழ் - ஆங்கிலம் இரு மொழிகள்மட்டும்தான்; மற்ற மொழி களுக்கு இடமில்லை'' என்று உறுதியாகத்  தெளிவாகச் சொன்னார்.

''அப்படி நான் செய்தவுடனே, ஒன்றை நான் இப்பொழுது கேள்விப்படுகிறேன், எங்கள் ஆட்சி யைக் கலைப்பதற்குத் திட்டமிடுகிறார்கள் என்று டில்லியிலிருந்து சிலர் சொன்னார்கள். இருக்கலாம், உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது; முடியுமா? என்று நான் கேட்கமாட்டேன். நீங்கள் அதை செய்யலாம்.

ஆனால், ஒன்றை நான் உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

என்ன தெரியுமா?

மக்கள் மன்றத்தை சந்திக்க முடியுமா? என்ற அச்சம் உங்களை உலுக்கும்!

நாம் இல்லாதபொழுது அல்லவா இந்த சட்டங் களை செய்தார்கள்; மேலும் இவர்கள் கையில் ஆட்சி இருந்த காரணத்தில்தானே இதை செய்தார்கள்.  உடனடியாக அதை மாற்றவேண்டும்; அந்தப் பெயரை மாற்றவேண்டும் - இந்தக் கொள்கையை மாற்றவேண்டும் என்று நீங்கள் நினைத்து, அவசரப் பட்டு நீங்கள் சில காரியங்களைச் செய்யலாம் என்று நினைக்கலாம் - அப்படி நினைத்த அடுத்த நிமிடத் திலேயே, இதைச் செய்தால், மக்கள் மன்றத்தின்முன் நாம் அவர்களை சந்திக்க முடியுமா? என்ற அச்சம் உங்களை உலுக்கும்.

அந்த அச்சம், அந்த பயம் எவ்வளவு காலத்திற்கு உங்களுக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலமும் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆளுகிறான் என்று பெயரே தவிர, என்னுடைய ஆட்சி முடிந்தது என்று பொருள் அல்ல'' என்று அழகாக அண்ணா அவர்கள் சொன்னார்.

அதையே நானும் இப்பொழுது சொல்கிறேன்.

பெரியார் - அண்ணா - கலைஞர்  ஆகியோர் தோள்கள்மீது நிற்கிறார் நமது முதலமைச்சர் மு..ஸ்டாலின்!

நீங்கள் யாரும் இங்கே வித்தைகள் காட்ட முடியாது. உங்களுடைய வித்தைகளை எல்லாம் புரிந்தவர்தான் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார். அவர் நன்கு பயிற்சி எடுத்தவர். அவருடைய கொள்கை மிகத் தெளிவானது.

பெரியாருடைய தோளில் அண்ணா நின்றார்-

அண்ணா தோளில் கலைஞர் நின்றார் -

மேற்கண்ட மூன்று பேரின் தோளின்மீது எங்கள் தளபதி மு..ஸ்டாலின் நிற்கிறார். அதை அசைக்க முடியாது - நெருங்க முடியாது.

அதற்கு மக்கள் மன்றம்தான் துணையாக நிற்கும். அந்த மக்கள் மன்றம்தான் இன்றைக்கு - இன்று முதல் பிறந்த நாள் கூட்டமாக அவரை வாழ்த்திக் கொண் டிருக்கிறது.

என்றும் துணை நிற்போம் இந்த ஆட்சிக்கு!

என்றும் வாழ்த்தும் - வாழ்த்துவதோடு நிற்காது - துணை நிற்கும் - துணை நிற்போம் இந்த ஆட்சிக்கு!

பாசிச பயங்கரவாத மதவாத, மதவெறி சக்திகளை முறியடிப்போம்!

மனிதநேயத்தைக் காப்போம்!

''மதவெறியிலிருந்து இந்த மண்ணைக் காப்போம்'' என்கிற உறுதிமொழியை எடுப்போம்!

அதுதான் அவருடைய பிறந்த நாள் விழாவில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரை என்று சொல்லி,

தி.மு.. செயல்வீரர்களுக்கு

நன்றி! நன்றி!! நன்றி!!!

அற்புதமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அத்துணை செயல்வீரர்களுக்கும் தலைதாழ்ந்த நன்றியை சொல்லி,

நீண்ட நேரம் இருந்த உங்களுக்கு நன்றி,நன்றி என்று கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க தளபதி,  பல்லாண்டு, பல்லாண்டு!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment