சென்னை, மார்ச் 3 தமிழ் நாட்டில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் திரும்பும் வகையில் கரோனா கட்டுப் பாடுகளை தளர்த்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.
இதுதொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (2.3.2022) வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 15.2.2022-இன் படி ஒரு சில கட்டுப்பாடு கள் நடைமுறைகள் பின்பற்றப் பட்டு வருகின்றன. 25.2.2022 அன்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில், கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உள்பட இதர தளர்வுகளை அறி விக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகு முறையை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
திருமணம் மற்றும் இறப்புகளுக்கு...
எனது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும் புவதற்கு ஏதுவாகவும் இது வரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3ஆம்தேதி (இன்று) முதல் நீக்கப்படுகிறது. மேலும், தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட இன்று முதல் 31ஆம் தேதி வரை திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர் களுக்கு மிகாமல் நடத்த அனு மதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 நபர்கள் பங்கேற்கலாம்.
இந்த 2 கட்டுப்பாடுகள் தவிர்த்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
முகக் கவசம் கட்டாயம்
மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட் டாயம் முகக் கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளு மாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழு ஒத்துழைப்பு அளிக் குமாறு உங் கள் அனைவரையும் கனி வுடன் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment