உக்ரைன் - ரசியா இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு விரைவில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

உக்ரைன் - ரசியா இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு விரைவில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை

மின்ஸ்க், மார்ச் 1- உக்ரைன் மீது ரசியா 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல் வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்கு தலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. உக்ரைன் நாட் டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரசிய படை கள் தாக்கி அழித்துள்ளன. 

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள் ளது. உக்ரைன் தலைநகர் கிவ்- நகரையும் நெருங்கி யுள்ள ரசிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத னால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரசிய படைகளுக்கு பதி லடி கொடுத்து வருகிறது. 

அதேவேளை, அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரசிய அதிபர் உத்தரவிட்டுள்ளதால் 3ஆம் உலகப்போர் ஏற் படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.

இதற்கிடையில், போரை முடிக்கு கொண்டு வர உக்ரைன் - ரசியா இடையே நேற்று (28.2.2022) பேச்சு வார்த்தை நடை பெற்றது. பெலாரஸ் நாட் டின் கொமெல் நகரில் பேச்சுவார்த்தை நடை பெற்றது.

இந்நிலையில், உக் ரைன் - ரசியா பல மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிக்கு வந்து உள்ளது. இந்த பேச்சு வார்த்தையின் போது சண்டையை உடனடி யாக நிறுத்திவிட்டு வெளி யேறிம்படி ரசியாவுக்கு உக்ரைன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட் டது.

ஆனால், பேச்சுவார்த் தையின் இறுதியில் எடுக் கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. மேலும், உக்ரைன் - ரசியா இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. 

உக்ரைனின் ராணுவ பலத்தை முழுமையாக அழிப்பதே போருக்கு முடிவு - ரசிய அதிபர்

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம் மானுவேல் மெக்ரான் ரசிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி யில் பேசினார். அப்போது, உக்ரைன் மீதான போரை ரசியா நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது, உக்ரை னின் ராணுவ பலத்தை முழுமையாக அழிப்பது மற்றும் கிரிமியா பகு தியை மேற்கு உலக நாடு கள் அங்கீகரிப்பதுமே போருக்கு முடிவுகட்டும்’ என பிரான்ஸ் அதிபரிடம் ரசிய அதிபர் புதின் கூறினார்.

No comments:

Post a Comment