சென்னை, மார்ச் 1- இந்தியா வில் உள்ள அரிய நோய் சமூகத்திற்கான விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற் காக உருவாக்கப்பட்ட ரேஸ்ஃபார் 7 இன் ஏழா வது பதிப்பை 27.2.2022 அன்று அரிய நோய்களுக் கான இந்திய அமைப்பு (ORDI) நடத்தியது.
மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற இப்போட் டியை டாக்டர் எல். சுவஸ்தி சரண், கூடுதல் பொது துணை இயக்கு னர் மற்றும் இயக்குநர் (அவசர மருத்துவ நிவா ரணம்) அவர்கள் கொடி யசைத்து துவக்கி வைத் தார். இந்த ஆண்டு 200 இடங்களில் இருந்து 4000 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் துவக் கத்தில் பேசிய டாக்டர் எல்.சுவஸ்தி சரண், கூறு கையில், “அரிதான நோய் களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந் திய அரிய நோய்களுக் கான அமைப்பு ஒரு மிகப் பெரிய மெய்நிகர் நிகழ்வை நடத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவில் பல அரிய நோய்கள் உள்ளது ஆனால் அவற்றில் சில வற்றுக்கு மட்டுமே இது வரை தீர்வு காணப்பட்டு உள்ளது, எனவே, அனை வருக்கும் அரிய நோய் களை பற்றிய விழிப் புணர்வைப் பரப்ப உதவு வோம் என்னும் உறுதி மொழியை நாம் எடுக்க வேண்டும். இந்த போட் டியில் பங்கு பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்." என்று கூறினார்.
No comments:
Post a Comment