கீவ், மார்ச் 2-அய்ரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத் தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத் திட்டார். இது குறித்து அவரது செய்தி தொடர் பாளர் நிகி போரோ கூறும் போது, அய்ரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத் திட்டுள்ளார்.
இது வரலாற்று பூர்வ ஆவணம். இந்த ஆவணத் தில் நாடாளுமன்ற சபா நாயகர் ஸ்டீபன்சுக்கு மற்றும் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் ஆகியோரும் கைª யழுத்திட்டுள்ளனர். அய்ரோப்பிய ஒன்றியத் தில் உறுப்பினர் ஆவதற் கும் மற்றும் பாதுகாப்புக் காகவும் உக்ரைன் மிகப் பெரிய விலையை கொடுத் துள்ளது’ என்றார்.
இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, ‘அய்ரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்ப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலி யுறுத்தினார்.
No comments:
Post a Comment