உக்ரைன் அதிபரை கொலை செய்ய கூலிப்படையினர் முகாமிட்டுள்ளதாக தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

உக்ரைன் அதிபரை கொலை செய்ய கூலிப்படையினர் முகாமிட்டுள்ளதாக தகவல்

கீவ், மார்ச் 2-  உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன.  பதி லுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்து வரும் நிலையில், தன்னை கொலை செய்வது மூலம் உக்ரைனை வீழ்த்த ரசியா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். 

இந்த நிலையில் உக் ரைன் அதிபர் ஜெலன்ஸ் கியை கொலை செய்ய தலைநகர் கீவில் ரசிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள் ளது. ரசிய அதிபர் புதி னின் நெருங்கிய கூட்டா ளிகளால் இயக்கப்படும் வாக்னர் எனப்படும் போராளிகள் குழு ஆப் பிரிக்காவில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து, அவர்கள் மூலம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டி வரு வதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

No comments:

Post a Comment