10.04.1948 - குடிஅரசிலிருந்து...
இனி இந்துவாக இருக்க மாட்டேன். நான் இனி சூத்திரனாக இருக்க மாட்டேன். இந்துமத அடையாளம் அணிய மாட்டேன் என்று முழக்கம் செய்தல் வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் கூறுவார்களானால், பார்ப்பனர்களே முன்வந்து மனுதர்மமே மக்களுக்கு எழுதப்பட்டதல்ல. அது தேவாளுக்கு எழுதப்பட்டதாக்கும் என்றுகூறி தம்மையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.
***
கருஞ்சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று யார் கூறினாலும், பூணூல் அணிந்த கூட்டம் நாட்டில் இருக்கும்வரை கருஞ்சட்டை அணிந்த கூட்டமும் இருந்தே தீரும். உச்சிக் குடுமி உள்ளவரை கருப்புக் கொடியும் பறந்து தீரும் என்று சொல்லிவிடுங்கள்.
உங்களை எந்தப் பார்ப்பனன் இது ஏன் என்று கேட்டாலும் நீ உயர்ஜாதி என்று காட்டிக் கொள்ள நீ பூணூல் அணிந்து கொள்ளும்போது நான் சூத்திரனல்ல. இந்துவல்ல என்று காட்டிக் கொள்ள நான் ஏன் கருஞ்சட்டை அணிந்து கொள்ளக்கூடாது என்று ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment