மதுரை-நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த கழகத் தோழர் ஓ.ராமச்சந்திரன்-ஆ.பி.ராஜபிரியா இணையர் தமிழர் தலைவரை சந்தித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., ஆய்வு படிப்பை (ஆர்.பி.ராஜபிரியா) நிறைவு பெற்றதின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 நன்கொடையாக வழங்கினர் (சென்னை, 1.3.2022).
கோவையில் ஜீ.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தகம் நிலையம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2022 பிப்ரவரி மாதத்தில் இயக்க ஏடுகளுக்கு சந்தா சேகரிப்பின் போது, விடுதலை மூன்று ஓராண்டு சந்தாக்கள், விடுதலை இரண்டு அரையாண்டு சந்தாக்கள், உண்மை ஓராண்டு சந்தா, தி.மாடர்ன் ரேசனலிஸ்ட் ஓர் ஆண்டு சந்தா ஆக மொத்தம் 7 சந்தாக்களுக்கான தொகை ரூபாய் ரூ.6,050 திரட்டப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் நாளில் கோவை ராசாகனி பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் அ.மு.ராஜாவிடம் விடுதலை நாளிதழுக்கு (குத்தூசி குருசாமி படிப்பகதிற்காக) ஓராண்டு சந்தா ரூ.1800 வழங்கினார்.
காரைக்குடி மாவட்டம், கல்லல் ஒன்றிய கழக செயலாளர் கொரட்டி வீ.பாலசுப்ரமணியன் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.1800அய் மண்டல கழக தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினார்.
தேவக்கோட்டை நகர் 10ஆவது வட்டம் தி.மு.க. வேட்பாளர் இரா.பிரான்சிஸ் சேவியர் சார்பில் ஒரு விடுதலை சந்தா ரூ.1800அய் காரைக்குடி மாவட்ட கழக துணைத் தலைவர் கொ.மணிவண்ணனிடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment