8 நாள்களில் ரசிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

8 நாள்களில் ரசிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் தகவல்

கீவ், மார்ச் 3- உக்ரைன் நாட்டின் மீதான ரசிய போர் 8ஆவது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன்-ரசியா இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்த தால் ரசிய படைகள் தாக்குதல் வேகத்தை சற்று குறைத்திருந் தது. ஆனால் எந்தவித ஆக்கப் பூர்மான முடிவுகளும் எட்டப் படாமல் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

    இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை ரசியா தீவிரப் படுத்தியது. ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் உக்கிர மான தாக்குதல்களை நடத்த தனது படைகளுக்கு ரசியா உத் தரவிட்டது. இதை தொடர்ந்து ரசியப் படைகள் முழு வீச்சில் தாக்கத் தொடங்கி உள்ளன.

கார்கிவ் நகர்

    அதன்படி உக்ரைனின் 2ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரசியப் படைகள் குண்டு மழை பொழியத் தொடங்கின. ஒரு பக்கம் 

    போர் விமானங்கள் குண்டுகளை வீச, மற்றொரு புறம் போர் கப்பல்களிலிருந்து ஏவுகணைகள் பாய்ந்தன. கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளையொட்டி அமைந் துள்ள அரசு கட்டடம் ஒன் றின் மீது ரசியா ஏவுகணை தாக் குதல் நடத்தியது. ஏவுகணை வீச்சில் அரசு கட்டடமும், அரு கில் உள்ள குடியிருப்புகளும் சின்னாபின்னமாகின.

    மேலும் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கிய தாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது ரசியப் படைகள் கார்கிவ் பகுதியில்  உள்ள காவல்துறை தலைமை யகத்தை ரசியா ஏவுகணையின் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

    அந்த கட்டடம் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில், தற் போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் ராணுவ நிர்வாகம், மக்கள் பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியே செல்ல வேண் டாம் என அறிவுறுத்தியுள்ளது.

கெர்சன் நகரை கைப்பற்றியது

    இந்த சூழலில் உக்ரைனின் கெர்சன் நகர் பகுதி முற்றிலும் ரசிய ராணுவத்தால் கைப்பற் றப்பட்டுள்ளதாக அந்த பகுதி ஆளுநர் தெரிவித்துள்ளார். கப்பல் கட்டும் தொழிற்சாலை கள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும். சுமார் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நக ரில் 20 சதவீத ரசிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.

    இதனிடையே உக்ரைனின் பல நகரங்களுக்குள்ளும் ரசிய வீரர்கள் நுழைந்து கடுமையாக தாக்கி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கீவில் ரசியப் படை கள் முழு வீச்சில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் அங்கு ரசியா கூடுதலாக படைகளை திரட்டி வருகிறது.

    இப்படி போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் உயி ருக்கு பயந்து சுரங்கபாதை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நிலத்தடி சுரங்களில் பதுங்கி யுள்ளனர். அதே வேளையில் ரசியப் படைகளின் உக்கிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அண்டை நாடுக ளுக்கு இடம் பெயர்ந்து வரு கின்றனர். இந்நிலையில்  கடந்த 8 நாட்களாக உக்ரைன் மீது நடைபெற்று வரும் போரில் ரசிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment