உக்ரைன் ராணுவ தளம் மீது தாக்குதல்: 70 வீரர்கள் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

உக்ரைன் ராணுவ தளம் மீது தாக்குதல்: 70 வீரர்கள் மரணம்

கீவ், மார்ச் 2- உக்ரைன் மீது முன்அறிவிப்பின்றி மற் றும் நியாயமற்ற முறையில் நடத்தப்படும் போரை முடிவுக்கு கொண்டு வரும் படி அய்.நா. அமைப்பு சிறப்பு கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட் டது.  ஆனால், அண்டை நாடான உக்ரைன் மீது நடத்தும் தனது போரை நியாயப்படுத்திய ரசியா, சொந்த மக்கள் மீது பகைமையுடன் உக்ரைன் நடந்து கொள்கிறது என தெரிவித்தது.

ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன் படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரசியா இறங்கி உள்ளது.

தொடர்ந்து உக்ரை னின் ராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகு திகள் மீது ரசியா தாக்கு தலை தொடுத்து வருகி றது.  ரசிய ராணுவப் படை களின் அணிவகுப்புகளை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்கா ணித்து வருகிறது.  இந்த நிலையில், கீவ் நகர் அருகே ரசிய ராணுவப் படைகள் நெருங்கியுள் ளன.  இந்தப் படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ஆன்டனோவ் விமான நிலையத்திற்கு அருகே சாலை முழுவதும் படைகள் ஆக்கிரமித்துக் காணப்படுகின்றன.  இந்த படைகள் பயணம் செய்து வரும் இவான்கீவ் நகருக்கு வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் அமைந்த சாலைகள் அருகே பல வீடுகள் மற் றும் கட்டடங்கள் தீப் பிடித்து எரிந்து கொண்டி ருக்கும் காட்சிகளும் ஒளிப்படங்களில் காணப் படுகின்றன.

இதுதவிர்த்து, உக் ரைன் எல்லையையொட்டி 20 மைல்கள் வடக்கே, தெற்கு பெலாரஸ் பகுதி யில் கூடுதல் தரைப் படை களும், தரைகளை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர் படைப் பிரிவுகளும் குவிக் கப்பட்டு உள்ள ஒளிப் படங்களும் வெளியிடப் பட்டு உள்ளன.  இது போன்ற பெரிய படை களை கண்டு அச்சம் தெரிவித்து உள்ள அதி காரிகள் பலர், உக்ரைனில் சமீபத்திய வன்முறை, பொதுமக்கள் படுகொலை கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றை பற்றியும் கவலை தெரிவித்து உள் ளனர்.

தொடக்கத்தில், ரசியாவுக்கு எதிரான உக்ரைனின் ஆக்ரோஷ எதிர்ப்புகளை கண்டு அதிர்ச்சியடைந்த போதும், தற்போது சூழ்நிலை அவர்களுக்கு அதிக சவாலாக உள்ளது என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ரசிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.  இதில், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்கு இடையே ஆக்டைர்கா என்ற பகுதியில் உக்ரை னின் ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது.  இதனை இலக்காக கொண்டு நடந்த தாக்கு தலில் உக்ரைனை சேர்ந்த 70 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என ஊடக தகவல் தெரிவிக் கின்றது.

No comments:

Post a Comment