உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்கும் அய்ரோப்பிய நாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்கும் அய்ரோப்பிய நாடுகள்

கீவ், மார்ச் 2-  உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்துள்ள தால் உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வி‌ஷயத்தில் ரசியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரசியாவுக்கு பொருளாதார தடை விதித்து உள்ளன.

அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க், செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளன.

இந்த நிலையில் அய்ரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரை னுக்கு வழங்குகின்றன.

உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்பு கின்றன அய்ரோப்பிய நாடுகள் 

பல்கேரியா-30, போலந்து -28, சுலோவாக்கியா-12 ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கு வதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

உக்ரைனின் கார்கிவ் நகரில் 
அரசுக் கட்டடங்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் தாக்குதல்
 

உக்ரைனின் கார்கிவ் நகரில் அரசுக் கட்டடங்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் ஏவுகணை தாக்குத லில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்விலும் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யப்படைகள் ஆயத் தம் ஆகி வருகின்றன.


No comments:

Post a Comment