முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 ஆவது பிறந்த நாளில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதலமைச்சர்கள், ஆளுநர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 ஆவது பிறந்த நாளில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதலமைச்சர்கள், ஆளுநர்கள் வாழ்த்து

சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு முதலமைச் சர் தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் 69ஆவது பிறந்த நாள் விழா 1.3.2022 அன்று எழுச்சியுடன் கொண்டா டப்பட்டுள்ளது. நாடு தழுவிய அள வில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், காங்கிரசு கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பல ரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது, தமிழ்நாட் டின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உங்களுக்கு நீண்ட பொதுவாழ்வு அமைய வேண்டும் என்றும் வாழ்த் தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டா லின் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, "தமிழ்நாட்டின் வளர்ச் சிக்காக நீங்கள் தொடர்ந்து பணி யாற்ற வேண்டும்" என்று தமது விருப் பத்தைத் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நன்றி தெரிவித்து, "தங்களின் ஒத்து ழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப் பேன்" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி யில் தொடர்பு கொண்டு, தாங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி, வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ்க எனவும் வாழ்த்தினார். 

மேற்கு வங்க மாநில முதலமைச் சர் செல்வி மம்தா, தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி யுடன் மலர்க்கொத்து அனுப்பி, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பலரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த னர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தமிழிலேயே பேசி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், முதலமைச்சர் அவர்களுக்கு ஆளு நர் அவர்களின் சார்பில், ஆளுநர் அலுவலக துணைச் செயலாளர் அவர்கள் நேரில் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்..

No comments:

Post a Comment