சென்னை, மார்ச் 3 தமிழ்நாடு அரசின் நிதிநிலைஅறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் அமைச்சரவை கூட்டம் 5ஆம் தேதி கூடுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்க உள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 18ஆம் தேதியன்றும், வேளாண்மை பட் ஜெட் 19ஆம் தேதியன்றும் தாக்கல் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதித்துறை அமைச் சர் பழனிவேல் தியாராஜனும், வேளாண்மைத்துறை பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்வார்கள்.
இந்த பட்ஜெட்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக தலைமைச் செயலகத்தில் 5ஆம் தேதி அமைச் சரவை கூட்டம் கூடுகிறது. முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் 2 பட்ஜெட்களுக்கும் ஒப்புதல் வழங்குவதோடு, புதிய அறிவிப்புகள், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே அடுத்த வாரத் தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment