பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

லிஸ்பன், மார்ச் 3- ஜெர்மனி நாட்டில் இருந்து 4 ஆயிரத்திற்கும் அதிக மான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்கா நோக்கி கடந்த மாதம் சரக்கு கப்பல் புறப் பட்டது. அந்த கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெண்ட்லிஸ், புரொஷீஸ், பென்ஸ், லம்போகினி, வெல்ஸ்வாகன் உள்பட நூற்றுக் கணக்கான சொகுசுக் கார்கள் கொண்டு செல்லப்பட்டன.

அட்லாண்டிக் கடலில் போர்ச் சுக்கல் நாட்டின் அசொரிஸ் தீவு பகுதி அருகே கடந்த 16ஆம் தேதி சென்றபொது கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தக வலறிந்த போர்ச்சுக்கல் கடற்படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். மேலும், கப்ப லில் சிக்கிய குழுவினர் 16 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், சரக்குக் கப்பலில் தீ மளமளவென பரவியது. தீயை அணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது. ஆனால், கப்பலில் தீ கட் டுக்கடங்காமல் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சி தோல்விய டைந்தது.

இந்நிலையில், தீ பற்றிய சரக்கு கப்பல் தற்போது அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சரக்கு கப்பலில் இருந்த 4 ஆயிரம் சொகுசு கார்களும் அட்லாண் டிக் கடலில் மூழ்கியுள்ளன. கட லின் அடியில் 3.5 கிலோ மீட்டர் ஆழத்தில் சரக்கு கப்பல் மூழ்கியுள் ளது. சரக்கு கப்பலில் இருந்து இது வரை எரிபொருள் கசிவு ஏற்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் சரக்கு கப்பல் அட்லாண்டிக் கட லில் மூழ்கிய நிகழ்வு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment