ரூ.45,000 விலையில் வெளியாகும் மின்சார இருசக்கர வாகனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

ரூ.45,000 விலையில் வெளியாகும் மின்சார இருசக்கர வாகனம்

மும்பை, மார்ச் 3- பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 மின்சார இருசக்கர வாகனத்தின் சோதனை ஓட்டத்தை 1.3.2022 முதல் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக சென்னை, பெங்களூர், அய்தராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் இன்ஃபினிட்டி மின்சார இருசக்கர வாகனத்தின் டெஸ்ட் டிரைவ் கிடைக்கிறது.

    இருசக்கர வாகனங்களை வாட கைக்கு விடும் நிறுவனமாக அறிமுக மாகிய பவுன்ஸ் நிறுவனம் தற்போது மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் மின்சாரவாகனங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் நிலையில் புது இன்ஃபினிட்டி இ1 மின்சார இருசக்கர வாகனத்தை பவுன்ஸ் நிறுவனம் அறிமு கம் செய்தது. இதை தொடர்ந்து அந்த மின்சார இருசக்கர வாகனத்துக்கான டெஸ்ட் டிரைவ் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மின்சார இருசக்கர வாகனம் ரூ.45,000 காட்சிக்கூட விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரில் 2kWh  பேட்டரியும், 2,2KW மோட்டாரும் இடம் பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 65 கி.மீ உட்சபட்ச வேகம் செல்லும் இந்த மின்சார இருசக்கர வாகனம், 85 கி.மீ வேகத்தை கொண் டுள்ளது. 

    பவுன்ஸ் நிறுவனம் இந்த மின்சார இருசக்கர வாகனத்திற்கு பேட்டரி சந்தா முறையையும் வழங்குகிறது. இதன் மூலம் பேட்டரி சார்ஜ் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் பேட்டரி மய்யங் களுக்கு சென்று புதிய பேட்டரிக்களை மாற்றிகொள்ளலாம். இதனால் நிரந்த ரமாக பேட்டரி வைத்துக்கொண்டு மெயிண்டைனன்ஸ் குறித்து வாடிக்கை யாளர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.

    இதுமட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் முடிந்தவுடன் அதிகம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டும் என அவசியமில்லை. சந்தா முறையில் புதிய பேட்டரிகளை வாங்கிகொள்ள லாம். இதன்மூலம் 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment