நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கவுன்சிலர்கள் பதவியேற்பு: 4ஆம் தேதி மேயர், துணை மேயர் பதவிக்கு தேர்தல்; மாநில தேர்தல் ஆணையம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கவுன்சிலர்கள் பதவியேற்பு: 4ஆம் தேதி மேயர், துணை மேயர் பதவிக்கு தேர்தல்; மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை, மார்ச்.2 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று (2.3.2022) வார்டு கவுன்சிலர்களாக பதவி யேற்றுக் கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூ ராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 90 சதவீதம் இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றனர். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி இமாலய சாதனை படைத்தது. அதே போன்று 138 நகராட்சியில் 137 நகராட் சிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. பேரூராட் சிகளிலும் திமுக கூட்டணிக் கட்சியினர் 90 சதவீத இடங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்தனர். அதிமுக, பாமக, பாஜ, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், மநீம கட்சி வேட்பாளர்கள் குறைந்த அளவே ஓட்டு வாங்கி படுதோல்வி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சியில் 1,373 வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 1,103 இடங்களை பிடித்துள்ளனர். இதில் திமுக மட்டும் தனியாக 952 இடங்களை பிடித்துள்ளது. காங்கிரஸ் மட்டும் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 164 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும், மற்றவை 82 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோன்று மொத்தமுள்ள 138 நக ராட்சியில் 3,842 வார்டு கவுன்சிலர் இடங் களில் திமுக கூட்டணி 2,659 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 2,360 இடங்களிலும், அதிமுக 638 இடங்களி லும், காங்கிரஸ் மட்டும் 151, பாஜக 56, மற்றவை 489 இடங்களை பிடித்துள்ளன.

மொத்தமுள்ள 4,389 பேரூராட்சிகளில் 7,604 வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 4,995 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 4,389 இடங்களிலும், அதிமுக 1,206 இடங் களிலும், காங்கிரஸ் மட்டும் 368 இடங்கள், பாஜ 230, மற்றவை 1,173 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் இன்று (2.3.2022) வார்டு கவுன்சிலர்களாக பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்கிறார்கள். 

இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிப்பிர மாணம் செய்து வைப்பார்கள். இதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு மீண்டும் மன்ற கூட்டம் தொடங்கும். அப் போது, மாநகராட்சி மேயர்,  நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். 4ஆம் தேதி மாலை 2.30 மணிக்கு துணைத் மேயர், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர்கள் தேர்தல் நடைபெறுகிறது.

முன்னதாக, மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுகிற வர்கள் 3ஆம் தேதி அந்தந்த மாநகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். போட்டி இருந்தால் மட்டுமே 4ஆம் தேதி கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்ந் தெடுப்பார்கள். இல்லையென்றால், ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி ஆணையர் மேயருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

No comments:

Post a Comment