ஜெனீவா, மார்ச். 1- உக்ரைனில் கடந்த 24ஆம் தேதி ரசியா தொடுத்துள்ள போரால் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை. இதனால் உள்நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின் றனர். வாகன வசதி இல் லாதவர்கள் கால்நடை யாக நடந்து செல்கிற அவலத்தையும் காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.
இந்த நிலையில் உக் ரைனில் இருந்து இது வரை 3 லட்சத்து 68 ஆயி ரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக அய்.நா. அகதிகள் ஆணையர் தெரிவித்தார். ஒரே நாளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ள தாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
முன்னதாக 1.5 லட்சம் பேர் போலந்து, ருமே னியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக அய்.நா. அகதிகள் பிரிவு தெரிவித்தது.
மேலும் போலந்து-உக் ரைன் எல்லையில் 14கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நின்றதாக அய்.நா. அகதிகள் ஆணை யரகத்தின் செய்தித்தொடர் பாளர் கிறிஸ் மெய்சர் தெரிவித்தார். போலந்து- உக்ரைன் எல்லையை 1 லட்சம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் கடந்து வந்துள்ளதாக போலந்து அரசு கூறி உள்ளது.
No comments:
Post a Comment