தமிழ்நாட்டுக்கு மழை வெள்ள பாதிப்பு நிவாரணம் - ஒன்றிய அரசு ரூ.353 கோடி ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

தமிழ்நாட்டுக்கு மழை வெள்ள பாதிப்பு நிவாரணம் - ஒன்றிய அரசு ரூ.353 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி, மார்ச் 4 தமிழ்நாட்டுக்கு மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ரூ.352.85 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

    கடந்த 2021ஆம் ஆண்டு பெருவெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடும் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து கூடுதல் நிதிஉதவி அளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி அதிகபட்சமாக கருநாடகத்துக்கு ரூ.492.39 கோடி வழங்கப்படுகிறது. 

    மராட்டியத்துக்கு ரூ.355.39 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.352.85 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆந்திராவுக்கு ரூ.351.43 கோடியும், இமாசல பிரதேசத்துக்கு 112.19 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.17.86 கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கூடுதல் நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ஒன்றிய அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிதிக்கு அப்பாற் பட்டது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது. 

    2021- - 2022ஆம் ஆண்டில் 28 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிதியத்தில் இருந்து ரூ.17,747.20 கோடியும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியத்தில் இருந்து ரூ.4,645.92 கோடியும் வழங்கப் பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக் கிறது.


No comments:

Post a Comment