ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக் கோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக் கோள்

    ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. சீனா சமீபகாலமாக விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மய்யம் செயல்படுத்தி வருகிறது. 

    கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ‘லாங் மார்ச் ராக்கெட்’ என்ற செயற்கைகோள் ஏவுதல் வாகனங்களை அந்த நாடு பயன்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, லாங் மார்ச்- 8 என்ற நவீன வகை ராக்கெட்டை  விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

    தெற்கு சீனா, ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து 22 செயற்கைக் கோள்களுடன் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வணிக சேவைகள், கடல் சுற்றுசூழல் கண்காணிப்பு, காட்டுத்தீ தடுப்பு ஆகிய பணிகளை இந்த செயற்கைக் கோள் கண்காணித்து தகவல்கள் அனுப்பும். மேலும், விண்ணில் இருந்து ஒளிப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை தற்போது சீனா படைத்துள்ளது.

 

No comments:

Post a Comment