சென்னை, மார்ச் 4 சென்னை, புதுக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் அ.ரசீத்கான், "களம் வென்ற வரலாற்று நாயகன் - 2021" எனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், களத்தை வென்றிட மேற்கொண்ட வியூகங்கள் - மக்களை தொடர்ந்து சந்தித்த தருணங்கள், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் சென்ற பாங்கு, எதிர்க்கட்சிகளின் அரசியல் கணிப்புகள் - விமர்சனங்கள் - பத்திரிக்கைகளின் கணிப்புகள் - விமர்சனங்கள் - பிரச்சாரத்தின் போது தலைவர் பேசிய உரைகள் - 100 நாட்களில் குறை தீர்ப்பு - உங்கள் தொகுதியில் ஸ்டாலின் - அ.தி.மு.க வை நிராகரிப்போம் நிகழ்வுகள்- தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளுக்கு தி.மு.க. தலைவர் அளித்த நேர்காணல் - கூட்டணிக் கட்சித் தலைவர்களின் தேர்தல் பரப்புரைகள் உள்ளிட்ட 2021 - சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கான படிக்கட்டுகளை ஆய்ந்தறிந்த இந்நூலின் வெளியீட்டு விழா நேற்று (03-03-2022) காலை 10.30 மணி அளவில் புதுக்கல்லூரி - எம். அய்.அய்.டி. அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் பஷீர் அகமது தலைமையில், நீதியரசர் அக்பர் அலி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த் துறையின் மேனாள் தலைவர், கவிமாமணி பேராசிரியர் தி. மு. அப்துல் காதர் வாழ்த்துரைவழங்கினார். துறைத்தலைவர் எம். எஸ்.ஏ. ஜபருல்லா கான் வரவேற்கிறார். நூலாசிரியர் முனைவர் அ. ரசீத்கான் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment