புதுடில்லி, மார்ச் 1- எல்.அய்.சி., நிறுவனத்தில், 20 சதவீதம் வரை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேற்கொள்ள, பிரதமரின் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.
எல்.அய்.சி., நிறுவனத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் முன் அனுமதி இன்றி, ‘ஆட்டோமேட் டிக்’ வழியில், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை, 20 சதவீதம் வரை மேற்கொள்வதற்கு, ஒன்றிய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக் கல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, எல். அய்.சி., நிறுவனத்தில் தன் வசம் இருக்கும் பங்குகளில் 5 சதவீதத்தை, புதிய பங்கு வெளியீட்டின் வாயி லாக விற்பனை செய்ய உள்ளது. இது தவிர, வெளிநாட்டு நேரடி முத லீட்டாளர்கள், இந்நிறுவனத்தில் ஆட்டோமெட்டிக் வழியில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில், சட்டதிருத்தத்துக்கான அனுமதியை ஒன்றிய அரசு தற் போது வழங்கி உள்ளது.
எல்.அய்.சி., சட்டம் 1956ன்படி, எல்.அய்.சி., நிறுவனத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை.தற்போ தைய அனுமதியின் படி, வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள், முன் அனுமதி பெறாமல் 20 சத வீதம் வரை எல்.அய்.சி., மற்றும் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங் களில் முதலீடு செய்ய இயலும்.
வெளிநாட்டு நேரடி முதலீடு களால் மூலதனம், தொழில்நுட்ப பரி மாற்றம், வேகமான பொருளா தார வளர்ச்சிக்கான திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட துறைகளில் வளர்ச்சி ஆகிய அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அரசின் கூடுத லான பங்கு விலக்கல் நடவடிக்கை களிலும் இந்த அனுமதி உதவிகர மாக இருக்கும் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment