புதுடில்லி, மார்ச் 3- கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட் டின் ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 1.33 லட்சம் கோடி ரூபாயை தாண்டி யுள்ளது.
இது, கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது 18 சதவீத அதிக வருவாய் என ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி வசூலுடன் ஒப் பிடும்போது, 26 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.பிப்ரவரி மாதத்தில், ஒமைக்ரான் பாதிப்புகள் மற்றும் அதை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக, அதற்கு முந்தைய ஜனவரி மாத வசூலை விட குறைந்துள்ளது.கடந்த ஜனவரியில், ஜி. எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாயாக இருந் தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாத வசூலில், ஒன்றிய ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 24 ஆயி ரத்து 435 கோடி ரூபாய். மாநில ஜி.எஸ்.டி., வசூல் 30 ஆயிரத்து 779 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த வசூல் 67 ஆயிரத்து 471 கோடி ரூபாய் என நிதிய மைச்சகம் தெரிவித்துள் ளது. மேலும், மதிப்பீட்டு மாதத்தில், கூடுதல் வரியாக 10 ஆயிரத்து 340 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment