பெரியார் திடலில் 10ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட, குறும்பட விழா - 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

பெரியார் திடலில் 10ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட, குறும்பட விழா - 2022

சென்னை, மார்ச் 3-- பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப் பில் 10 ஆவது சென்னை பன்னாட்டு  ஆவணப்படங்கள், குறும்படங்கள், ”ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்”, ”பெரியார் திடல்”, ”எத்திராஜ் கல்லூரி”, ”கிறிஸ்டியன் மகளிர் கல்லூரி  உள்ளிட்ட சென்னை யின் பல்வேறு இடங்களில் திரையிடல் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் 23 ஆம் தேதி மாலை 5 மணி முதல், இரவு 8:30 மணி வரை, 25 ஆம் தேதி காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, 26 ஆம் தேதி பிற்பகல் 3:30 முதல் இரவு 8:30 மணி வரை, 27 ஆம் தேதி காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலுமாக நான்கு நாட்கள் பெரியார் சுய மரியாதை ஊடகத்துறை, மறு பக்கம் இணைந்து நடத்தினர்.

திரைப்படக் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, வணிகத்திரைப்படங்களுக்கு மாற்றுப் படைப்புகளாக இந்த சென்னை பன்னாட்டு ஆவ ணப்பட, குறும்பட விழா 2022 அமைந்திருந்தது. இதில் உண் மைகளை வெளிப்படையாகப் பேசுகின்ற பல்வேறு ஆவணப் படங்களும், குறும்படங்களும் திரையிடப்பட்டன. அத்தோடு மாற்றுத் திரைப்படங்களை உருவாக்கி மக்களுக்கு நம் பிக்கை அளித்து வரும் இளம் படைப்பாளிகளை ஊக்கு விக்கும் பொருட்டு சிறந்த ஆவ ணப்படம், குறும்படங்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டிருந் தது. அதில் 80 படைப்புகள் கலந்துகொண்டிருந்தன.

.பி. முசாபர்பூரில் நடை பெற்ற மதக்கலவரம் குறித்த ஆவணப்படத்தை இயக்கி, பா...அரசின் அச்சுறுத்த லுக்கு இலக்காகி, மூளை நரம்பு வெடித்து மரணமுற்ற ஆவ ணப்பட இயக்குநர் சுப்ரதீப் சக்ரவர்த்தி பெயரால் வழங்கப் பட்ட விருதை, ஸ்வைபன் பானர்ஜி மற்றும் கஸ்தூரி பாசு ஆகியோர் இணைந்து உரு வாக்கியஙிமிஞி திளிஸி ஙிணிழிநிகிலி" எனும் ஆவணப்படம் பெற்றது. அடுத்து, மேற்கு வங்கத்தை அடாவடியாக அபகரிக்க முயற் சிக்கும் பா...வின் முயற்சியை கேரள இயக்குநர் ஃபாசில் ரஜாக்கின்கிரசெண்ட்குறும் படம் இயக்குநர்  அருண்மொழி பெயரிலான பரிசுக்குத் தேர்வா னது. இருவருக்கும் பரிசுகளு டன் சான்றிதழ்களையும் சிறப்பு அழைப்பாளராக வருகை தந் திருந்த திரைப்பட இயக்குநர் அம்ஷன் குமார் வழங்கிச் சிறப் பித்தார். நான்கு நாட்களும் மாற் றுக்கலை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment