தமிழர் தலைவருக்கு நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

தமிழர் தலைவருக்கு நன்றி!

 எனது வாழ்விணையர் தமிழரசன் அவர்களின் மறைவுக்குத் தாங்கள் வெளியிட்ட இரங்கல் செய்திக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வலிப்பு - மறதி நோயால் வருந்தினார். அருகிலிருந்து அவருக்குப் பணிவிடை செய்தேன்.

எனது மூத்த மகள் முத்துமொழி - கிராம நிர்வாக அலு வலராகவும், இளைய மகள் கவிதா மருத்துவராகவும் உள்ளனர். இருவரின் துணையோடு அவரைப் பராமரித்தேன். மகள் டாக்டர் கவிதாவின் மருத்துவம் மூலம் வலிப்பு நோயிலிருந்து விரைவில் விடுபட்டார். மறதி - மாறவில்லை.

28.1.2022 அன்று காலை சுமார் 5.30 மணியளவில் எங்களை விட்டுப் பிரிந்தார். எந்த மதச் சடங்குகளும் மூடநம்பிக்கைகளும் இன்றி அவருக்கு இறுதி மரியாதை செய்தோம்.

தாங்கள் அளித்தவீரவணக்கத்தோடு’ - அவரின் இறுதி மரியாதை நடந்தேறியது. மீண்டும் தங்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

- புலவர் கண்மணி தமிழரசன், மதுரை

No comments:

Post a Comment