விதிமீறிய கட்டடங்களுக்கு மின் கட்டணம் அதிகம் வசூலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

விதிமீறிய கட்டடங்களுக்கு மின் கட்டணம் அதிகம் வசூலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, பிப்.5 விதிமீறல் கட்ட டங்களுக்கு மின்சாரக் கட்டணம், வரி உள்ளிட்டவைகளை 5 மடங்கு அதிகம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் காஞ்சனா (வயது 70). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 1985ஆம் ஆண்டு என் கணவர் நிலம் வாங்கி வீடு கட்டினார். இந்த வீடு கட்ட முறையான திட்ட அனுமதி கேட்டு  இணையம்   மூலம் விண்ணப் பித்து இருந்தோம். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை 'சீல்’ வைக்க  தாக்கீது அனுப்பி யுள்ளனர். இதை, ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கட்டட விதிமீறலில் ஈடுபட்ட வர்கள், அதிலிருந்து விடுபட உயர்நீதிமன்றத்தை அணுகும்போது, அவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க கூடாது. இடைக்காலமாக வழங்கப்படும் இந்த நிவாரணம்கூட, வழக்கு விசாரணை மேலும் ஒரு சுற்றுக்கு வழிவகுத்து விடும். கட்டட விதிமீறுபவர்களிடம் நீதிபதிகள் கருணை காட்டக்கூடாது.

மின்சார சேவை என்பது அத்தி யாவசியமானது. அந்த சேவையை விதிமீறல் கட்டடங்களுக்கு வழங்க கூடாது. அந்த சேவை வழங்கினாலும் அதற்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். கட்டடம் அங்கீகரிக்கப் படும் வரை விதிமீறிய கட்டடங் களுக்கு பிரீமியம் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

கட்டட திட்ட அனுமதி வரன் முறை செய்யும் வரை, இதுபோன்ற கட்டடங்களுக்கு மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் ஆகியவை சாதாரண கட்டணத்தை விட 5 மடங்கு அதிகம் வசூலிக்க வேண்டும்.

இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டட விதிமீறல் ஈடுபடுவோரை தடுக்க முடியும். விதிகளுக்குட்பட்டு கட்ட டங்கள் கட்டும் எண்ணத்தை உரு வாக்க முடியும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment