லக்னோ, பிப். 10- ''பிரதமர் மோடியே என் சாவுக்கு பொறுப்பு" என்று குற்றம்சாட்டி சிறு வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருடன் விஷம் குடித்த மனைவி உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரை சேர்ந்தவர் ராஜீவ் தோமர் (வயது 40), அவர் செருப்புக் கடை நடத்தி வந்தார்,
கடந்த 8.2.2022 அன்று அவர் தனது 'பேஸ்புக் லைவ்' பக்கத் தில் வீடியோவை திறந்து வைத் தார். அதில் தனது தற்கொலை முயற்சியை எல்லோ ருக்கும் பார்க்கும்படி நேரடியாககாண் பித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
எனது சாவுக்கு பிரதமர் மோடியே பொறுப்பு. அவ ருக்கு வெட்கம் இருந்தால், நிலைமையை மாற்ற வேண்டும். அவர் எல்லா பிரச்சினைகளி லும் தவறானவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயி களின் நலம் விரும்புபவர் அல்ல.
இவ்வாறு கூறிவிட்டு, அவர் விஷம் குடித்தார்.
தற்கொலை முயற்சியை அவருடைய மனைவி பூனம் தடுக்க முயன்றார். அதற்கு தோமர், ''அர சாங்கம்தான் நாம் சொல் வதை கேட்பது இல்லை, நீயாவது நான் சொல்வதை கேள்” என்று கூறினார்.
அவரது வாயில் இருந்து விஷத்தை வெளி யேற்ற முயன் றார், பூனம். ஆனால் அதற்கு பலன் இல்லாததால், பூனமும் விஷம் குடித்தார்.
இதை நேரடியாகபார்த்தவர்கள் மூலம் காவல் துறைக்குத் தகவல் சென்றது. கணவன்மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பூனம் உயிரிழந்தார். தோமர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தோமர் நடத்திய செருப்பு கடை, கடந்த 2020 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல மாதங்களுக்கு மூடப்பட்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
அதனால் செருப்புகள் சேதமடைந்து தோமர் இழப்படைந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்ததாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, தோமரின் மனைவி மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஊரடங்கு ஆகியவற்றால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு ஒன்றிய அரசு உதவவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment