சென்னை, பிப். 7- ரயில் தண்ட வாளங்கள் அருகில் சூரிய மின்சக்தி வேலிகள் அமைக்க வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்கள் மோதி யானைகள் பலியான சம்பவங்கள் தொடர் பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ் குமார் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண் டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியி ருப்பதாவது:-
ரயில்வே தண்டவாளங்கள் அருகில் சூரிய மின்சக்தி வேலி களை அமைப்பது வன விலங் குகளுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் என வனத்துறை ஆட் சேபம் தெரிவிக்கிறது.
இந்த விவகாரத்தில் ரயில்வே மற்றும் வனத்துறை அதிகாரி கள் கலந்து பேசி தீர்வுகாண வேண்டும். அதுவரை சூரிய மின்சக்தி வேலிகளை ரயில்வே நிர்வாகம் அமைக்க வேண்டாம்.
அதேபோல யானைகள் கடந்து செல்வதற்கான சுரங்க பாதைகளை அமைப்பதற்காக ரயில்வே வாரியம் நிதி ஒதுக்க வேண்டும்.
இப்பணிகளின் முன்னேற் றம் குறித்து வருகிற மார்ச் 18ஆம் தேதி தெற்கு ரயில்வே நிர்வாகம், வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment